புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2016

கோவையில் காட்டு யானையை கும்கி யானை மடக்கியது எப்படி? (வீடியோ)கோவை நகருக்குள் கடந்த சில தினங்களாக புகுந்த ஒற்றை காட்டு யானையை ''மிஷன் மதுக்கரை மகராஜ் ''என்ற பெயரில் வனத்துறையினர் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக பொள்ளாச்சி டாப் ஸ்லிப்பில் இருந்து 3 கும்கி காட்டு யானைகள் வரவழைக்கப்பட்டு, அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதில் கலீம் என்ற கும்கி யானை, காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதில் அதிக திறமை கொண்டது. கலீம், காட்டு யானையை லாரியில் ஏற்றும் காட்சிகள் மிரட்டுகின்றன. பிடிபட்ட காட்டு யானையை, கும்கி யானையாக மாற்ற வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

ad

ad