சனி, ஜூன் 18, 2016

சத்தியபாமா பல்கலைக்கழக சேர்மன் ஜேப்பியார் மரணம்சத்தியபாமா பல்கலைக்கழக சேர்மன் திரு.ஜேப்பியார் சற்று முன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார்.
சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூரில் சத்தியபாமா பல்கலை வளாக வீட்டில் வசித்து வந்த ஜேப்பியார், உடல்நலக்குறைவினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எம்.ஜி.ஆர்., முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தலைவராக இருந்தவர் ஜேப்பியார். 'மாவீரன்' ஜேப்பியார் என அழைக்கப்படும் இவர், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் அதிமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சட்டமேலவையின் அரசு கொறடாவாக இருந்தவர் ஜேப்பியார். புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தற்போதைய சென்னை மேயர் சைதை துரைசாமி,
காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு, ஜேப்பியார் ஆகியோர் எம்ஜிஆர் இருந்த போது மிக முக்கிய புள்ளிகளாக வலம் வந்தவர்கள். ஜேஸடிமை பங்கி ராஜ் என்ற ஜேப்பியாரின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.