புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2016

கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு சுவாதியை சந்தித்த இளைஞர்: நேரில் பார்த்த ரயில் பயணி

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார் ஐ.டி. ஊழியர் சுவாதி.
இந்த சம்பவத்தில் குற்றவாளி இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 

சுவாதியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு இளைஞர் சந்தித்துப் பேசியதாக தமிழ்ச்செல்வன் என்ற தனியார் நிறுவன ஊழியர் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 

6.50 செங்கல்பட்டு ரயிலில் ஏற 6.40க்கு ரயில் நிலையத்தில் இருப்பேன். அப்போது டப் டப் என சத்தம் கேட்டது. நான் 4வது கம்பார்ட்மெண்ட்டில் ஏறுவேன். அந்தப் பெண் 5வது கம்பார்ட்மெண்ட்டில் பெண்களுக்கான பெட்டியில் ஏற நின்றார். அப்போது ரத்த வெள்ளத்தில் கிடந்தார். 6, 7 பேர்தான் இருந்தார்கள். இரண்டு பெண்கள் அய்யோ, அய்யோ என கத்தினார்கள். ஒரு வாலிபர் இரண்டாவது நடைமேடையில் வேகமாக சென்றார். அவரை ஒருவர் துரத்தினார். அப்போது செங்கல்பட்டு ரெயில் வந்தவுடன் நான் ஏறிபோய்விட்டேன். 

இதற்கு முன்பு கடந்த 6, 7 தேதி போல இந்த பெண் கொலையுண்ட இடத்திலேயே உட்கார்ந்திருந்தார். அப்போது அந்த பக்கமாக வந்த வாலிபர், பின்னால் பையை மாட்டியிருந்தார். கையில் வாட்டர் பாட்டில் வைத்திருந்தார். 30 வயது மதிக்க தக்கவராக இருந்தார். கொஞ்சம் வெள்ளையும் மாநிரமாகவும் இருந்தார். அவர் அந்த பெண்ணை ஒரு 5 முறை பட்டு பட்டு என்று அடித்தார். அடித்த உடன் அந்த பெண் நிலைதடுமாறியது. செல்போன் கீழே விழுந்தது. கீழே விழுந்த செல்போனை எடுத்துக்கொண்டு, ரயில் வந்தவுடன் ரயில் ஏறி அந்த பெண் போய்விட்டார். அந்த பெண் எந்தவித ரியாக்சனும் காண்பிக்கவில்லை. அங்கிருந்தவர்கள் என்ன இந்த பொண்ணு எந்தவித ரியாக்சனும் காண்பிக்கவில்லை. அப்படி அடித்துவிட்டு போகிறானே என்று பேசிக்கொண்டார்கள். இந்த சம்பவம் நடந்த பிறகு, புகைப்படம் வெளியிட்டவுடன் அந்த பெண்ணை அடிச்ச பையனா என சரியாக அடையாளம் தெரியவில்லை. 

நானே முன்வந்து இதுகுறித்து காவல்துறையில் போய் சொன்னேன். போலீசார் என்னிடம் தீவிரமாக விசாரித்தனர். நான் கொடுத்த தகவல் உபயோகமாக இருப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு கூறியுள்ளார். 

மேலும், இந்த சம்பவத்தில் ஏற்கனவே அறிமுகமான நபர்தான் ஈடுபட்டுள்ளார் என்று நான் மட்டுமல்ல. அந்த சம்பவத்தை பார்த்த 6, 7 பேரும் நினைத்தார்கள் என்றார்.

ஏன் கொலையாளியை பிடிக்க முன்வரவில்லை. கொலையை தடுக்க முன்வரவில்லை என்ற கேள்விக்கு, கண் இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. கொலையாளி வேகமாக நடந்து செல்வதைப் பார்த்தால் சரண் அடைவான் போல இருந்தது. பின்னால் ஒருவர் துரத்திக்கொண்டு ஓடினார். உடனே ரயில் வந்ததும் ஏறிச் சென்றோம். வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அரைகுறையாக அப்போது நடந்த சம்பவத்தை கூறிக்கொண்டிருந்தார். இவ்வாறு கூறினார். 

சுவாதி கொலையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. ரயில் நிலையத்தின் அருகில் உள்ள வீடுகளில் பதிவான சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொணடு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சுவாதி பணிபுரிந்த இடங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

ad

ad