புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2016

ஆவா மற்றும் ரொக் ரீம் போன்ற குண்டர்கள் குழு உருவாகுவதற்கு தென்னிந்தியத் திரைப்படங்களே காரணமாக இருந்துள்ளன



யாழ்ப்பாணத்தில் ஆவா மற்றும் ரொக் ரீம் போன்ற குண்டர்கள் குழு உருவாகுவதற்கு தென்னிந்தியத் திரைப்படங்களே கார
ணமாக இருந்துள்ளன என விசாரணையின்மூலம் தெரியவந்துள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாலக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
23|2 என்ற நிலையியற் கட்டளையின்கீழ் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தென்னிந்தியத் திரைப்படங்களை அதிகமாகப் பார்வையிடும் யாழ் இளைஞர்கள் படங்களில் வரும் குழுக்களைப்போன்று குழுக்களாக ஒன்றிணைந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
யாழில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட தனி நபர்கள் மற்றும் குழுக்களைக் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டபோது குறித்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆவாக் குறூப் என அடையாளம் காணப்பட்ட ஆறுபேர்கள் சுன்னாகம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆவா குறூப்பிலிருந்து பிரிந்து புதிய குழுவாக உருவாக்கப்பட்ட ரொக் ரீம் எனப்படும் குழு அண்மையில் யாழ்ப்பாணக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டது. இவர்களும் தற்போது விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் பாடசாலை மாணவர்களும் இருக்கின்றமை தெரியவந்துள்ளது.
இக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டுவருவதோடு, இவர்கள் தொடர்பான விபரங்களைச் சேகரிக்கும் பணியில் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

ad

ad