புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2016

தீர்வுத்திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக் கேட்டாலும் உரியதை மட்டுமே கொடுப்போம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முடிந்தளவு கோரிக்கைகளை முன்வைத்தாலும் அரசாங்கம் உரியதை மட்டுமே அவர்களுக்கு
கொடுக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் அஜித்பி பெரேரா தெரிவித்தார்.
அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பிரதியமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும், இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலான புதிய சீர்திருத்தம் ஒன்றை ஏற்படுத்த கடந்த தேர்தல் காலங்களில் இருந்து அரசாங்கம் செயற்பட்டு வந்ததாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
தேர்தலில் வெற்றியாக பெற்றுக்கொண்ட அரசியல், ஜனநாயகம் மற்றும் மக்கள் தனித்துவம் போன்ற உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியல் சீர்திருத்தம் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அதேபோல் மக்களின் யோசனைகள் உள்வாங்கப்பட்டு அரசாங்கம் உறுதியளித்த விதத்திலேயே நாட்டிற்கு பொருத்தமான புதிய தீர்வுத்திட்டம் இந்த ஆண்டிற்குள் உருவாக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா இதன்போது தெரிவித்தார்.

ad

ad