புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2016

ரொனால்டோ ஏமாற்றம்: போர்த்துக்கலுக்கு அதிர்ச்சி அளித்த ஐஸ்லாந்து

ஐரோப்பிய கால்பந்து தொடரில் வலுவான போர்த்துக்கல் அணியுடனான போட்டியை 1-1 என டிரா செய்து ஐஸ்லாந்து அணி அதிர்ச்சி
கொடுத்துள்ளது.
இந்த தொடரின் 'எஃப்' பிரிவு போட்டியில் ஐஸ்லாந்து- போர்த்துக்கல் அணிகள் நேற்று மோதின.
இந்தப் போட்டியில் போர்த்துக்கல் எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐஸ்லாந்து அணி சவால் கொடுத்து விளையாடியது.
ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் போர்த்துக்கல் வீரர் ஆண்ட்ரி தந்த பந்தை, நானி கோலாக மாற்றி அசத்தினார். இதனால் முதல் பாதியில் போர்த்துக்கல் 1-0 எனமுன்னிலை பெற்றது.
பின்னர் 2வது பாதியில் அதிரடி தாக்குதலை தொடங்கிய ஐஸ்லாந்து அணிக்கு 50வது நிமிடத்தில் பிஜார்னசன் ஒரு கோலை போட்டு பதிலடி கொடுத்தார். ஐஸ்லாந்து அணியின் தற்காப்பு ஆட்டம் பலமாக இருந்தது.
போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோமீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. முடிவில் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஹங்கேரி அணி 2-0 என்றகோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.

ad

ad