புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2016

மூடப்படுகிறது தாய்லாந்தின் புகழ்பெற்ற புலிக் கோயில்

தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் செல்லும் புகழ் பெற்ற புலிக் கோயிலில் சட்டவிரோதமாக விலங்குகள் கடத்தப்படுகின்றன -
துன்புறுத்தப்படுகின்றன என குற்றச்சாட்டுக்கள் எழுந்துளளன. இதையடுத்து அந்தக் கோயில் விரைவில் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாங்கொங்குக்கு 140 கி.மீ. தொலைவில் "வாட் பா லுவான்ங்தா புவா யன்னாஸாபன்னோ' என்ற பொளத்த மதக் கோயில் அமைந்துள்ளது. 'புலிக் கோயில்' என்றழைக்கப்படும் இந்தக் கோயிலில் ஏராளமான புலிகள் வளர்க்கப்படுகின்றன. இந்தக் கோயிலுக்கு தாய்லாந்து அரசு 7 புலிகளை அன்பளிப்பாக கடந்த 2001-ஆம் ஆண்டு வழங்கியது. அரசு சார்பில் புலிகளை வளர்ப்பதற்காக அந்தக் கோயிலுக்கு அந்தப் புலிகள் வழங்கப்பட்டன. இந்த 15 ஆண்டுகளில் அந்தப் புலிகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகி, 137 ஆக உயர்ந்தது. பெரும்பாலும் வங்கப் புலிகளைக் கொண்ட இந்தப் புலிக் கூட்டத்தைப் பார்ப்பதற்கு உலகம் முழுவதிலிமிருந்து சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர். எனினும், இந்த புலிக் கோயிலில் விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன, சட்ட விரோதமாக புலிகளும், அதன் உறுப்புகளும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன என நீண்ட காலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கோயிலில் உள்ள புலிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகள் கேட்டபோதும், இதற்கு கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வந்தது. இந்தச் சூழலில், புலிக் கோயிலில் ஆய்வு மேற்கொள்வதற்காக தேசிய வனப் பூங்காக்கள் மற்றும் வன விலங்குக் காப்பகத் துறை அதிகாரிகள் மாகாண நீதிமன்றத்தில் தேடுதல் உத்தரவைப் பெற்றனர். அந்த உத்தரவின் அடிப்படையில், புலிக் கோயிலுக்குள் திங்கட்கிழமை நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், சுமார் 40 புலிக் குட்டிகளின் சடலங்களைக் கண்டெடுத்தனர். மேலும், அங்கு விலங்குகள் சட்ட விரோதமான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன எனக் கூறி, அங்குள்ள 137 புலிகளையும் காவ்ஸன் காவ் மற்றும் பிரதாப் சாங் வன விலங்குக் காப்பகங்களுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கினர். 7 நாள்களில் இந்தப் பணி நிறைவடையும் என்றாலும், கோயில் நிர்வாகிகள் ஒத்துழைக்க மறுப்பதால் அனைத்து புலிகளையும் காப்பகங்களுக்கு அனுப்புவதற்கு கூடுதலாக சில நாள்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து கோயில் நிர்வாக அமைப்பின் துணைத் தலைவர் சுபித்போங் பாக்சாருங் கூறுகையில், புலிகள் வெளியேற்றப்படுவதை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாகவும், மாகாண நீதிமன்றத்தின் தேடுதல் உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.

ad

ad