புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2016

ரசிகர்கள் வன்முறை எதிரொலி: ரஷிய கால்பந்து சங்கத்துக்கு அபராதம்

ஐரோப்பிய கால்பந்து தொடரில், கடந்த 11–ந்தேதி மார்செலியில் நடந்த இங்கிலாந்து – ரஷியா இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல்
கணக்கில் டிராவில் முடிந்தது. ஆட்டம் முடிந்ததும் ஸ்டேடியத்துக்குள் இங்கிலாந்து, ரஷிய ரசிகர்கள் பயங்கரமாக மோதி கொண்டனர். இந்த சம்பவத்தில் 35 பேர் காயமடைந்தனர். அவர்களது மோதல் போக்கு மைதானத்திற்கு வெளியேயும் நீடித்தது. ரஷிய ரசிகர்களே அதிகமாக தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. ஏற்கனவே தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக விழிபிதுங்கி நிற்கும் பிரான்ஸ் போலீசுக்கு கால்பந்து ரசிகர்களின் முரட்டுத்தனம் புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் போட்டோ மற்றும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் அடாவடி ரசிகர்களை அடையாளம் கண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியேற்ற அந்த நாட்டு போலீஸ் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. தனி பஸ்சில் கேன்ஸ் நகரில் சென்ற ரஷிய ஆதரவு ரசிகர்களை மடக்கிய போலீசார் அவர்களை தூதரகத்தில் தங்க வைத்து உள்ளனர். ஏறக்குறைய 50 ரஷிய ரசிகர்களை உடனடியாக அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 6 இங்கிலாந்து ரசிகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மைதானத்தில் ரஷிய ரசிகர்களின் வெறியாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, ஒழுங்கு நடவடிக்கையாக ரஷிய கால்பந்து சங்கத்துக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்தை நேற்று அபராதமாக விதித்தது. ரசிகர்களின் வன்முறை தொடர்ந்தால் ஐரோப்பிய கால்பந்து போட்டியில் இருந்து ரஷிய அணி தகுதி நீக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ad

ad