புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2016

சிறிலங்கா நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

நாட்டை நிதி நெருக்கடிக்குள் தள்ளினார் என்று குற்றம்சாட்டி, நிதியமைச்சருக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வி கண்டது.
கூட்டு எதிரணியைச் சேர்ந்த 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன இன்று காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதையடுத்து நடந்த விவாதத்தைத் தொடர்ந்து, இன்று மாலை 5.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இஇதில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக, 145 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்மூலம், 94 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லாப் பி்ரேரணை தோற்கடிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில், 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், மகிந்த ராஜபக்சவும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
அதேவேளை ஜேவிபி உறுப்பினர்கள், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad