புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2016

ரொனால்டோ தலைமையில் போர்ச்சுகல் அணி!

யூரோவுக்கான போர்ச்சுகல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரொனால்டோ தலைமையிலான இந்த அணியில் செட்ரிக்,
ரிச்சர்டோ கார்வாலோ, பெப்பே, ஜோஸ் வான்டே, டேனிலோ, ஆன்ரியா சில்வா, ஆன்ரோ கோமஸ், மட்டின்ஹோ, ரஃபா, குயிரேஸ்மா, ஈடர், நானி உள்ளிட்ட 23 வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
பிரான்ஸ் அணியில் ஓலிவர் ஜிரார்ட்
யூரோவுக்கான பிரான்ஸ் அணியின் கேப்டனாக லாரீஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். பேட்ரிஸ் எவ்ரா, சக்னா, அடில் ரேமி, லாரன்ட் கோசின்லி, மட்டோடி, பால் போக்பா, சிசாக்கோ, ஆன்ட்ரியோ கிரேஸ்மேன், ஓலிவர் ஜிரார்ட் , யோகன் கபாயி , கிங்ஸ்லி கோமன் உள்ளிட்ட 23 வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இத்தாலி அணியில் பாலோட்டலி இல்லை
கடந்த யூரோ கால்பந்து தொடரில் கலக்கிய மரியோ பாலோட்டலிக்கு இந்த யூரோவுக்கான இத்தாலி அணியில் இடம் கிடைக்கவில்லை. ஜியான்லுகி பஃப்பன் கோல்கீப்பரும் கேப்டனும் ஆவார். கெலினி, பானுச்சி, பர்சாக்லி, ஃபுளோரன்சி, தியாகோ மோட்டா, டேனியல் டி ரோஸி, கேன்ரீவா, ஸ்டீபன் எல்ஸ்ராவி, கிரான்சினோ பெல்லி உள்ளிட்ட 23 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணி!
யூரோவுக்கான இங்கிலாந்து அணியில் கேப்டன் ரூனி தலைமையில் 23 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஜோ ஹர்ட் கோல்கீப்பராக களமிறங்குவார். கேரி காகில், கிறிஸ் ஸ்மால்லிங், ரஹீம் ஸ்டெர்லிங், ஜேம்ஸ் மில்னர், ஆடம் லல்லனா, ஜோர்டான் ஹேண்டர்சன், ஜேக் வில்ஷயர், ஜேமி வார்டி, ஸ்டர்ரிஜ், ரஷ்ஃபோர்ட்டு ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ad

ad