புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2016

இளைஞர்களை சீரழிக்கும் ஆபாச இணையதளங்களை முடக்க கருத்துரிமையே தடைக்கல்!


கோவை அருகே உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்களில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதை தொடக்கி வைத்த மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

     “இந்தியாவில் ஏராளமான குடும்பங்களில் கணவரைப் பிரிந்த அல்லது இழந்த பெண்கள் தங்களது குடும்பத்தை தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர். மேலும், பல குடும்பங்களில், பெற்ற குழந்தைகளின் ஆதரவு இல்லாமலும், உறவினர்களின் உதவி ஏதும் இல்லாமலும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே குடும்பத்தை பெண்கள் நிர்வகித்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நாம் எவ்வளவு முக்கியத்துவம் வழங்குகிறோமோ அதைப் போலவே தனியாக குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் குடும்பத் தலைவிகள் சந்திக்கும் பிரச்னைகளுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும்.
   
  மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களின் காரணமாக நாட்டில் இளம் விதவைகளின் எண்ணிக்கை கூடியிருப்பது உண்மைதான். ஆனால் இதற்கு, அரசு மட்டுமே முழு பொறுப்பாகாது. மது விற்பனையைக் குறைப்பதுடன், ஒவ்வொரு தனி மனிதரிடத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட குற்றங்களில் போதிய ஆதாரங்களை விரைவாகத் திரட்டி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கையில் உள்ளது.

     இதுபோன்ற குற்றங்களில் விரைந்து செயலாற்றுவது தொடர்பாக காவல் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மகளிர் ஆணையம் தேவையான பயிற்சிகளை வழங்கி வருகிறது. மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு மக்களும், பொது நல அமைப்புகளும் கூடுதல் கவனத்துடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும்.
 
நாடு முழுவதிலும் பெண் குழந்தைகளுக்கு 8-ஆம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி, தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கவேண்டும். குழந்தைகளுக்கான மனநல ஆலோசகர்கள் போதுமான அளவில் நியமிக்கப்பட வேண்டும் என்பன போன்ற விஷயங்களை புதிய தேசியக் கல்விக் கொள்கையில் கொண்டு வரவேண்டும் என்று மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

அதேபோலவே, உள்ளாட்சி அமைப்புகள், சட்டப் பேரவை, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்தியில் ஆளும் பாஜக அரசு பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிச்சயம் நிறைவேற்றும் என  எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு காரணமாக இருக்கும் ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், அதுபோன்ற இணையதளங்களை முடக்குவதற்கு எதிராக கருத்துரிமை என்ற பெயரில் சிலர் குரல் எழுப்புகின்றனர். பெண்களுக்கு எதிரான இதுபோன்ற விஷயங்களில் கூட சுதந்திரம், கருத்துரிமை என்று பேசுபவர்கள் இருக்கும்போது எங்களால் என்ன செய்ய முடியும்” என்றார்.

ad

ad