புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2016

யாழில் மூன்று சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான
சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட தேவா, சன்னா, பிரகாஸ் ஆகியோர் தொடர்பாக தகவலறிந்தால் உடனடியாக தம்மை தொடர்பு கொள்ளுமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு சமூகவிரோத மற்றும் வாள்வெட்டு சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இந் நிலையில் இவர்களில் தேவா என்பவர் மீது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வாள்வெட்டு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வேறு பொலிஸ் நிலையங்களிலும் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த நபர் உட்பட மூன்று பேரையும் கைது செய்வதற்காக விசாரணைகளையும் ஏற்பாடுகளையும் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் அனைத்தும் மேற்கொண்டிருந்தன.
இவற்றில் இவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ள சுன்னாகம், யாழ்ப் பாணம், கோப்பாய் ஆகிய பொலிஸ் நிலையங்களால் இவர்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் வைத்து வாள்வெட்டு நடவடிக்கை ஒன்றுக்கு தயாராக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவர்களை கைது செய்வதற்கான நட வடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இருந்த போதிலும் அவர்கள் தப்பிச்செல்ல முற்பட்டபோது தேவா என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கைது செய்ய முயற்சித்திருந்த போதும் குறித்த பிரதான சந்தேக நபரான தேவா என்பவர் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தார்.
எனினும் இவ் விடயம் தொடர்பாக தாம் துப்பாக்கி பிரயோகம் எதனையும் மேற்கொள்ளவில்லையென சுன்னாகம் பொலிஸார் மறுத்திருந்தனர்.
பின்னர் ஒர் ரொக்டீம் எனும் வாள்வெட்டு கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
அத்துடன் அதன் பின்னர் தேவா மற்றும் ஏனைய இருவர்களுடனும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பலரை சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள மேற்குறித்த மூன்று பிரதான சந்தேகநபர்கள் தொடர்பாக தகவலறிந்தவர்கள் உடனடியாக சுன்னாகம் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோரியுள்ளார்.
இதன்படி தகவலறிந்தவர்கள் 0718591331 அல்லது 0724 339000 அல்லது 077899 8901 அல்லது 0772336249 ஆகிய பொலிஸ் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

ad

ad