புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2016

சேலம் வினுப்பிரியா தற்கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட இளைஞர் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

சேலம் அருகே இளம்பெண் வினுப்பிரியாவின் தற்கொலைக்கு காரணமான வழக்கில் கைது செய்யப்பட்ட
இளைஞர் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலம் மாவட்டம் இடங்கண சாலையைச் சேர்ந்த அண்ணாதுரையின் மகள் வினுபிரியா (22). தனது முகத்தை வேறொரு புகைப்படத்துடன் இணைத்து ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததால், அதிர்ச்சி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த போலீசார் வினுப்பிரியாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து செல்போன் மூலமாக  பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கண்டனறிந்தனர். செல்போன் ஐஎம்இஐ நம்பர் மூலம் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த நபர் கல்பாரப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என போலீசார் முடிவு செய்தனர். பின்னர் அவரை பிடித்து விசாரித்தபோது, வினுப்பிரியா புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தததை ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சேலம் காவல்துறை கண்காணிப்பாளர் அமித்குமார் சிங், சுரேஷ் என்பவரை கைது செய்துள்ளோம். அவருடைய போன் மூலம் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றார்.

இதையடுத்து சுரேஷை சங்ககரி இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். சுரேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

ad

ad