புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2016

இரும்பு கூடுகளுக்குள் எமது மக்கள் வாழ்வதற்கு விரும்பவில்லை’ -பொருத்து வீடு தொடர்பில் சம்பந்தன்!

மக்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்து அரசாங்கம் பணிகளைச் செய்துவரும் நிலையில், 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக மீள்குடியேற்ற, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
65,000 வீட்டுத் திட்டம் தொடர்பில் முழுமையான வெளிப்படைத் தன்மை பேணப்படுகிறது.
சகல நடைமுறைகளையும் பின்பற்றியே பிரான்சை சேர்ந்த மிட்டால் நிறுவனத்துக்கு குறித்த திட்டத்தை வழங்க அமைச்சரவை இணங்கியது.
பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் குழு குறித்த பொருத்து வீடுகள் குறைவான காலத்தினுள் அமைக்கப்படக் கூடியவை என்றும் மணல் மற்றும் கூலி போன்ற உள்ளூர் வளங்கள் தேவைப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த 65,000 பொருத்து வீடுகள் 30 வருட உத்தரவாதத்துடன் அமைக்கப்படுவதோடு 70 வருட ஆயுளைக் கொண்டவை என எமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்த வீடுகளை பெறுவதற்காக யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களில் இருந்து 97,232 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரின் உரையின் போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ‘இரும்பு கூடுகளுக்குள் எமது மக்கள் வாழ்வதற்கு விரும்பவில்லை’ என்றார்.

ad

ad