புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2016

மெஸ்சி, ரொனால்டோவிற்கு இணையானவர் அல்ல நெய்மர்-பீலே சொல்கிறார்

பிரேசில் அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி மற்றும் ரொனால்டோவிற்கு நெய்மர் இணையானவர் அல்ல என்று கால்பந்து ஜாம்பவான்
பீலே கூறியுள்ளார்.
ஸ்பெயின் கால்பந்து கிளப் அணிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர்களில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர், ஆகியோர் முக்கியமானவர்கள்.
இதில் மெஸ்சி, ரொனால்டோ தற்போதைய காலகட்டத்தில் சிறந்த வீரர்களாக உள்ளனர். இவர்களுடன் நெய்மரையும் இணைத்துப் பேசிவருகிறார்கள். ஆனால், பிரேசில் ஜாம்பவான் பீலே, நெய்மரை இவர்கள் இருவருடன் இணைத்து பேசமுடியாது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பீலே மேலும் கூறுகையில்,
“நெய்மரை அவரது இளம் வயதிலிருந்தே எனக்குத் தெரியும். பல வருடங்களுக்கு முன் அவரது பயிற்சியாளர் என்னிடம், நெய்மர் சிறந்தவர் என்று கூறியிருந்தார். இருந்தாலும், அவர் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோருக்கு இணையான சிறந்த வீரர் கிடையாது.
இன்றைய காலகட்டத்தில் சிறந்த கால்பந்து வீரர் யார் என்று கேட்டால், நான் கண்டிப்பாக மெஸ்சி என்றுதான் கூறுவேன். போர்த்துக்கல் ஜாம்பவான் கிறிஸ்டியானா ரொனால்டோ வித்தியாசமான ஸ்டைலைக் கொண்டவர். ஆனால், சிறந்தவர் மெஸ்சிதான் என்பது என்னுடைய கருத்து என்றார்

ad

ad