புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2016

கூட்டு எதிர்க்கட்சிஎம்.பிக்கள் அரசுடன் இணைவா? அது பசிலின் சூழ்ச்சியாம்.

கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணையப் போவதாக பரப்பப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையெனவும், இது பசில் ராஜபக்ஷவின் சூழ்ச்சிக் காரர்களினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையே ஆகும் எனவும் கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள எவரும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ள அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாதிருக்க தீர்மானம் எடுத்துள்ளதாகவும், இந்த பிரச்சாரத்தை கட்சியினுள் கருத்து முரண்பட்டுள்ள பசில் ராஜபக்ஷவே முன்னெடுத்து வருகின்றார். கூட்டு எதிர்க் கட்சியின் அதிகாரத்தை தனக்குப் பெற்றுக் கொள்ளும் சூழ்ச்சியே இதுவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பசிலை கூட்டு எதிர்க் கட்சியுடன் இணைத்துக் கொள்வதில் கட்சியிலுள்ள சிலருடன் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த எதிர்ப்பின் காரணமாக அவருடைய சூழ்ச்சிக்காரர்களினால் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார். 

ad

ad