புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2016

வெடித்து சிதறிய ஆயுதக் கிடங்குகள்! பரபரப்பான கொழும்பு! காரணம் என்ன? வெளிநாட்டு நிபுணர்களின் அதிர்ச்சித் தகவல்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக நாசமடைந்துள்ளமை வேண்டுமென்றே செய்யப்பட்ட
சூழச்சியாக இருக்கலாம் என வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தல் தொடர்பிலான விசேட வெளிநாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்பு முறைப்படி செய்யப்பட்ட ஒன்றென கூறப்படுகின்றமை மற்றும் நேரில் பார்த்தவர்களின் கருத்தினை அடிப்படையாக கொண்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிய ஆயுத களஞ்சிய அறையிலிருந்து பெரிய ஆயுத களஞ்சிய அறை வரையில் வெடிப்பு பரவி சென்றமை இதற்கான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான ஆயுதக் கிடங்குகள் நிலத்துக்கடியிலேயே உள்ளன. ஆயுதக்கிடங்கில் இறுதி பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள கருவி ஒன்று வெடித்தால் மாத்திரமே இவ்வாறான பாரிய வெடிப்பு ஒன்று ஏற்படும் என்பது வெளிநாட்டு நிபுணர்களின் கருத்தாகும்.
உலகின் எந்தவொரு ஆயுதகிடங்குகளிலும் பாதுகாப்பின் இறுதியில் அதனை வெடிக்க செய்யும் முறை உள்ளது.
போராட்டம் ஒன்றின் போது ஆயுதகிடங்கு எதிரியின் கைக்கு செல்லும் நிலை ஏற்பட்டால், தப்பி செல்வதற்கு முன்னர் அது எதிரியின் கைக்கு செல்வதற்கு இடமளிக்காமல் அனைத்தையும் வெடிக்க வைக்க அவ்வாறான முறை கையாளப்படும்.
இவ்வாறான நடைமுறைகள் கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் செயற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறன முறையினை “பாதுகாக்க முடியவில்லை என்றால் அழிப்பதே சிறந்தது” என்ற சூழ்நிலைக்கமைய மேற்கொள்ளப்படும்.
கொஸ்கம ஆயுதகிடங்கு இந்த முறையில் தீ பிடித்து அழிந்துள்ளது என்ற அடிப்படையில், எதிரியின் கையில் கிடைப்பதற்கு பதிலாக அழிக்கும் முறையில் செயற்படுத்தப்பட்டுள்ளதென சந்தேகம் எழுந்துள்ளதாக குறித்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கு பல காரணங்கள் உள்ளன.
நேரில் பார்த்தவர்கள் பாரிய சத்தத்துடன் சிறிய ஆயுதகிடங்கில் இருந்து தீ ஏற்பட்டதாகவும், பின்னர் அது பாரிய ஆயுத கிடங்கு வரை பரவி சென்றதாக குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான ஒன்று தானாகவே ஏற்பட முடியாது. அப்படியென்றால் வெடிக்க செய்வதற்கு அவசியமான சார்ஜர் செயற்படுத்தபட வேண்டியது அவசியமாகும்.
கொழும்பில் நேற்றைய வெப்பநிலை சென்டிகிரேட் 30.6 டிகிரி இருக்கும் போது வெப்பநிலை காரணமாக வெடிப்பதற்கு அவசியமான முறையில் சார்ஜர் ஒன்று செயற்படுத்த முடியாது.
அப்படி இல்லை என்றால் இவ்வாறு வெடிக்க வைப்பதற்கு அவசியமான சார்ஜர் ஒன்று யாரோ ஒருவரினால் செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
அதற்கமைய நீண்ட காலமாக முழுமையான பாதுகாப்புடன் இருந்து ஆயுதகிடங்கு நேற்று மாலை வெடித்துள்ளமை முழுமையான சூழ்ச்சிக்கமைய மேற்கொள்ளப்பட்டதென்பது வெளிநாட்டு நிபுணர்களின் கருத்தாக உள்ளன.
இந்த வெடிப்பின் கனரக ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்ட இரு களஞ்சியசாலைகள் முற்றாக அழிந்துள்ளன. மேலும் சில கிடங்குகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிய வருகிறது. இந்த அனர்த்தம் காரணமாக ஒரு இராணுவ வீரர் பலியானதுடன் 37 காயங்களுக்கு உள்ளானதாக இராணுவ தரப்பு அறிவித்துள்ளது.

ad

ad