புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2016

மலேசியாவில்சூ டு பிடிக்கின்றன இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் தேசிய முன்னணிக்காக மைபிபிபி களமிறங்கியது

சுங்கை பெசாரில் மும்முனை போட்டியும் கோலகங்சாரில் நான்கு முனை போட்டியும் நிலவும் வேளையில், இவ்விரு
தொகுதிகளிலும் முறையே வரும் ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வழி இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டன. தேசிய முன்னணியின் உறுப்பு, தோழமை கட்சிகள் எப்போதும் போல ஒன்றிணைந்து மக்கள் பிரச்சினைகளைக் கண்டறிய களமிறங்கி விட்டன. 
தேசிய முன்னணியின் மாபெரும் வெற்றியை எதிர்பார்க்கும் மைபிபிபி கட்சி உறுப்பினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னரே சுங்கை பெசார், கோல கங்சாரை சென்றடைந்து விட்டனர். ஒரு செயல்நடவடிக்கை அறையைத் தயார் செய்து. திட்டம் தீட்டி விவேகமாக செயல்பட்டு வருகின்றனர். கட்சியின் மூத்த உதவித் தலைவர் டத்தோஸ்ரீ மெக்லின் டிகுருஸ் தலைமையில் இளைஞர், மகளிர் பிரிவினர் தங்களின் கடமைகளை ஆற்றி வருகின்றனர். 
தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் சத்தியா சுதாகரன், தேசிய மகளிர் பிரிவுத் தலைவி ஹெலன் உட்பட விலாயா, சிலாங்கூர் மைபிபிபி உறுப்பினர்களும் இங்கு களமிறங்கியுள்ளனர். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தேசிய முன்னணிக்காக பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். 
மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ், இன்று கோல கங்சார் தொகுதிக்கு வருகை மேற்கொண்டு மக்களைச் சந்திப்பார். இதுவரை தேசிய முன்னணி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. அவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறி மைபிபிபியின் பிரச்சார அலைக்கு இன்னும் மெருகேற்றுவார். 
தேர்தல் அலை ஒரு புறம் வீசினாலும், 365 நாட்கள் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.  தொகுதி, கிளை என உறுப்பினர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. 
இந்த நடவடிக்கைகளை தாய்மொழி நாளிதழ் தொடர்ந்து பிரசுரம் செய்து வருகின்றது. அதே வேளையில் மைபிபிபி அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் இவை பதிவேற்றப்படுகின்றன. 
பிரச்சாரத்தில் களமிறங்கியிருக்கும் மைபிபிபி
சுங்கை பெசார், கோல கங்சார் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மைபிபிபி அணியினர் களமிறங்கியுள்ளனர். மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவற்றைத் தீர்த்து வைக்க வழிவகை செய்யும் மைபிபிபி உறுப்பினர்களின் படங்களை இங்கே காணலாம். 
பேரா மகளிர் பிரிவின் மனிதநல உதவிகள் 
புந்தோங், சுங்கை பாரி குடியிருப்பில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பேரா மகளிர் பிரிவினர் மனிதநல உதவிகளை வழங்கினர். வசதி குறைந்த ஐந்து குடும்பங்களுக்கு அவர்கள் நன்கொடை வழங்கினர். 
மைபிபிபி இளைஞர் பிரிவு, இந்து மாமன்றம் ஏற்பாட்டில் அனைத்துலக யோகா தினம் 2016
ஜூன் 21ஆம் தேதி அனைத்துலக யோகா தினமாகும். அதனை முன்னிட்டு மைபிபிபி தேசிய இளைஞர் பிரிவினரும், மலேசிய இந்து மாமன்றமும் அனைத்துலக யோகா தினத்தை ஏற்பாடு செய்துள்ளனர். அதன் செயல்நடவடிக்கைகள் குறித்த முதல் செய்தியாளர் சந்திப்பு மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்றது

ad

ad