புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2016

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ

தன் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க
தன்னால் முடியாதென்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில், கடந்த 2006ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பயணித்த வாகனம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்த உதவியதாக நான்கு தமிழ் கைதிகளுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சாட்சியளித்தார்.
அதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கோத்தாபய ராஜபக்ஸ,
தன் மீது குண்டு தாக்குதலை மேற்கொள்ள உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நோக்கம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் விசாரணையொன்று நடத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், பொது மன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டுமென்று அறிவித்தார்.
மேலும், கருத்துக்களை தெரிவித்த கோத்தபாய ராஜபக்ஸ தனக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பை நீக்குவதற்கு அரசாங்கம் தயாராகிவருவதாக குற்றம்சாட்டினார்.
இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த அவர், இந்த தீர்மானத்தை மீண்டும் பரிசீலனை செய்யுமாறு தற்போதைய பாதுகாப்பு செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ad

ad