புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2016

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியமன அரசவை உறுப்பினர்களுக்கான விருப்பக் கோரல் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் அறிக்கையின் பிரகாரமும், நியூயோர்க் நகரில் ஒக்ரோபர் 1, 2010ம் ஆண்டில் கூடிய அரசபையின் இரண்டாவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் அமைப்பு சட்டம் உட்பிரிவு 1.4க்கு அ மைவாகவும் நியமன அரசவை உறுப்பினர்களுக்கான விருப்பக் கோரல விடுக்கப்படுகப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
பின்வரும் நாடுகளில் அல்லது பிராந்தியங்களில் வதியும் தமிழர் அல்லது தமிழரல்லாதோரும், வெற்றிடமாக உள்ள இருபது நியமன அங்கத்துவத்திற்கு இந்த விருப்பக் கோரல் விடுக்கப்படுகின்றது.
நாடுகள் மற்றும் பிராந்திய விபரங்கள் :
சிங்கபூர் 2 – மலேசியா 3 – மத்திய கிழக்கு 2 – மொரிசியஸ் 2 – மீதமான ஆசியப்பிரந்தியம் 1 – மீதமான ஐரோப்பிய பிராந்தியம் 1 – ஓசியனா ( ஒஸ்றேலியா, நியூசிலாந்து நீங்கலாக) 1 – கரேபின் மற்றும் தென்னமெரிக்கா 1 – மீதமான ஆபிரிக்கா – தென்னாபிரிக்கா நீங்கலாக ) 1 – இந்தியா 5
அரசியல் யாப்பில் 1.4.3ல் பரிந்துரைக்கப்பட்டுள்ள நியமன அங்கத்துவத்துக்கான தகமைகள் :
அ) 2010 மார்ச் 15ஆம் நாள் வெளியிடப்பட்ட மதியுரைக்குழு அறிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழீழக் குடிமக்களாக இருத்தல் வேண்டும்.
அல்லது
ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் ஆகியனவற்றில் ஏதாவது ஒன்றினூடாக இணைவு கொண்டிருத்தல் வேண்டும்.
ஆ) 17 வயது நிறைவடைந்தவராய் இருத்தல் வேண்டும்.
இ) எந்த நீதிமன்றத்தாலும் சுயலாப அல்லது சுயநோக்க செயல்பாடுகளுக்கான குற்றத்திற்காக தண்டிக்கப்படாதவராய் இருத்தல் வேண்டும்.
அல்லது
அவரது வழக்கில் குற்றத் தண்டனை குற்றத் தீர்ப்புகளின் பதிவில் இருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஈ) தமிழீழ மக்களின் நலனுக்குக் கேடாக, பிற நாடுகளிலிருந்து சேவை, தகுதிநிலை அல்லது பொருளியல் நன்மை அடையாதவராய் இருத்தல் வேண்டும்.
உ) அரசமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நோக்கங்களை ஏற்றுக் கொள்கின்றவராய் இருத்தல் வேண்டும்.
மதியுரைஞர் குழுவினால் வரையறுத்த தமிழீழ குடியாளருக்குரிய வரைமானங்களில்  ‘.தேர்தல் ஆணைக்குழுவுக்கு திருப்திகரமாக தன்னை தமிழீழ குடியாளராக காட்டிக்கொள்ளகூடிய ஒருவர்.’ என்பதுமொன்றாகும்.
இந்த வகையான நியமன அங்கத்தவர்கள் அரசவையிலும், மற்றும் அந்தந்த நாடுகளிலோ அல்லது பிராந்தியங்களிலோ தமிழீழ குடியாளராக பிரதிநிதிப்படுத்துவர் அல்லது அவர்களுக்காக குரல் கொடுப்பார்.
மேலும் நா.தமிழீழ அரசாங்கத்தின் விழுமியங்களுக்கும் கொள்கைகளுக்கும் இணைவாக, இளைஞர்களையும் பெண்களையும் முக்கிய பங்கேற்கும்படியும் ஆர்வப்படுத்துகிறோம்.
இந்த 20 நியமன அங்கத்தவர்களும் அரசவையின் அமர்வுகளில் பங்கேற்கவும், விவாதங்கள், கலந்துரையாடல்களில் பங்கேற்கவும், அரசவையில் எடுக்கப்படும் தீர்மானங்களில் வாக்களிக்கவும் உரிமை உள்ளவராக இருப்பார்.
அனைத்து சட்டவாக்க வலிமையும் அதிகாரமும் விவாதிக்கப்பட்டு அரசவைக்கு விடப்படும். நடப்பு அரசவையின் தவணை, எதிர்வரும் 2018 ஆண்டு நடுப்பகுதியில் நிறைவடையும்.
நியமிக்கப்படும் அங்கத்தவர்கள் அரசவை அமர்வுகளில் உதவியும், உயர்வடையச் செய்தும், முன்னேற்றியும், சகாயம் செய்தும், மேம்படுத்துவதுடன், பல்வேறான செயற்குழுக்களில் ஆர்வமாக பங்கெடுத்துக் கொள்வதோடு, ஈழத்தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தில் தமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான முயற்சிகளில் கவனம் வைத்து உழைக்க ஆர்வப்படுத்தப்படுகிறார்கள்.
இன்னொரு தடவை முள்ளிவாய்க்கால் போன்ற இனவழிப்பு திரும்பவும் வரமுடியாது தடுக்கும் வண்ணம், ஈழத்தமிழ் மக்களுக்கு சுதந்திரமும், இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைத்து ஈழத் தமிழ்மக்கள் விடுதலைப் பெற்ற மக்களாகவும், கௌரவத்துடனும் வாழ, நா.தமிழீழ அரசாங்கமானது சனநாயக இராஜதந்திர வழியில் பாடுபட்டு வருகின்றது.
ஆர்வமுள்ள பெருமக்கள், நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் அமைப்பைtgte-us.org என்ற இணைப்பை அழுத்தி காணமுடியும் என்பதுடன், தங்கள் விருப்பத்தினை தெரிவிப்பதற்கான விண்ணப்ப படிவத்தையும் கல்வித்தகுதி நிரலையும் யூலை 15, 2016க்கு முன்னராக அளவில் pmo@tgte.org குறித்த இந்த மின்னலுக்கு அனுப்பி வைக்க வேண்டுகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad