புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

ரதமர் வேட்பாளராக களமிறங்கும் மஹிந்த

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தீர்மானித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ
தெரிவித்துள்ளார்.
ஜப்பான் டைம்ஸூக்கு வழங்கிய நேர்காணிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது முறையும் ஜனாதிபதியாக வரமுயற்சித்த போது அதற்கு தடையேற்பட்டதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், பிரதமர் போட்டிக்கு தடை இல்லை என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வடக்கு மக்கள் தன்னை நம்பியிருந்தும், தனக்கு வாக்களிக்க தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னை தவறாக எடைபோட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது விடுதலைப்புலிகள் மீண்டும் இணைவதை தடுக்க அரசு தவறிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad