புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2016

தி.மு.க. வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம்; ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியபோது,  ‘’வெற்றி தலை நிமிரச்செய்யும், தோல்வி தலைகுனிவை தரும் நிலையில், தேர்தலில் வெற்றியையும் தோல்வியையும் எப்படி சமமாக பார்க்க முடியும்?. 

சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி, திருமயம், காரைக்குடி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சிக் குரியது. 

தி.மு.க. வலிமையான கட்சி என்கிற போதும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சி தான் என்பதை வெற்றி பெற்ற வேட்பாளர்களே ஒப்புக்கொண்டு உள்ளனர்.

காங்கிரஸ் வலிமையாக இருப்பதை இது போன்று கூட்டங்கள் நடத்தி நாள்தோறும் நிரூபிக்க வேண்டும். அடிமட்ட தொண்டர்களை அங்கீகரிப்பதில்தான் நமது வெற்றி உள்ளது. தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகள், 234 சட்டமன்ற தொகுதிகள் ஆகியவைகளோடு ஜனநாயகத்தின் வழித்தடம் முடிந்து விடவில்லை. 

மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட, ஒன்றிய குழு, ஊராட்சிகளில் நமது வலிமையை வெற்றி மூலம் உணரவைக்க வேண்டும். 

வருகிற உள்ளாட்சி தேர்தலில் உங்களில் பலர் வெற்றி பெறவேண்டும். நம்மால் முடியாது என்பதைவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும். அடுத்து வருகிற 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலில் யார்? யார்? போட்டியிடப்போகிறீர்கள் என்பதை நமக்குள் பேசி முடிவு செய்ய வேண்டும். வெற்றிக்காக என்னுடைய முழு ஒத்துழைப்பையும், உழைப்பையும் தரத்தயாராக இருக்கிறேன். 

கன்னியாகுமரியிலும், சிவகங்கையிலுமே கட்சி வலிமையாக உள்ளது. மீதமுள்ள 37 பாராளுமன்ற தொகுதிகளிலும் வலிமை இல்லாமல் போனதற்கு கட்சியின் நிர்வாக கோளாறுதான் காரணம். எனவே, அடுத்து வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை வலிமை மிக்கதாக மாற்ற வேண்டியது ஒவ்வொரு தொண்டரின் கடமையாகும். தினமும் கட்சி தொண்டர்கள் கூடி விவாதிக்க வேண்டும். தொடர்ந்து விவாதிப்பதுதான் அரசியல். அதை சரியாக செய்தால் நமது வெற்றியை எவரும் தடுக்கவும் முடியாது, நம்மை யாரும் தவிர்க்கவும் முடியாது’’என்று தெரிவித்தார்

ad

ad