புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2016

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது இந்தியா

6 அணிகள் இடையிலான 36–வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது கடைசி
லீக்கில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் நேற்று மல்லுகட்டியது. கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் கண்ட இந்திய அணி, பலம் பொருந்திய ஆஸ்திரேலியாவின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. இந்தியாவின் தற்காப்பு வளையத்திற்குள் எளிதில் ஊடுருவிய ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து கோல் போட்டு மிரட்டினர். 20–வது நிமிடத்தில் டிரென்ட் மிட்டானும், 23–வது நிமிடத்தில் கேப்டன் அரன் ஜாலெவ்ஸ்கியும், 35–வது நிமிடத்தில் பிளைன் ஒஜில்வியும், 45–வது நிமிடத்தில் டிரிஸ்டான் ஒயிட்டும் கோல் அடித்தனர். இந்திய தரப்பில் ரகுநாத் (45–வது நிமிடம்), மன்தீப்சிங் (49–வது நிமிடம்) ஆகியோர் போட்ட கோல்கள் ஆறுதல் மட்டுமே அளித்தது. முடிவில் ஆஸ்திரேலிய அணி 4–2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை பந்தாடியது. 4–வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா (13 புள்ளி) ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
7 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி) உள்ள இந்திய அணியின் வாய்ப்பு, இங்கிலாந்து (5 புள்ளி)– பெல்ஜியம் (4 புள்ளி) இடையிலான லீக் ஆட்டத்தின் முடிவை பொறுத்தே தெரிய வரும். இந்த ஆட்டம் ‘டிரா’ ஆனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும். அவ்விரு அணிகளில் ஒன்று இறுதிப்போட்டி வாய்ப்பை தட்டிச் சென்றால், இந்திய அணி 3–வது இடத்தை நிர்ணயிக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இன்று விளையாடும். இறுதி ஆட்டமும் இன்றே நடக்கிறது.

ad

ad