புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2016

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முருகையா சுகிந்தன் மனித உரிமைப் பேரவையை பிரதிநிதித்துவம் செய்ய அனுமதி

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஜெனீவா ஏற்றுக்கொண்டுள்ளது என சிங்கள ஊடகமொன்று அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற சட்டவிரோத அமைப்பினை ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் அலுவலகமும் மனித உரிமைப் பேரவையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் சட்ட ஆலோசகரான வீ.ருத்ரகுமாரனின் தலைமையின் கீழான நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின், ஐக்கிய நாடுகள் அமைப்புப் பிரதிநிதியாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முருகையா சுகிந்தன் மனித உரிமைப் பேரவையை பிரதிநிதித்துவம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பில் கலப்பு நீதிமன்றமொன்று உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நேற்று ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் சுகிந்தன் பங்கேற்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அலுவலகத்தின் 4ம் இலக்க அறையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.இந்தக் கூட்டத்தில் ஆறு சட்ட வல்லுனர்கள் பங்கேற்றிருந்தனர்.
இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய நிச்சயமாக சர்வதேச நீதவான்களைக் கொண்ட கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் எதுவும் கோரவில்லை என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad