புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2016

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல்தீர்வு-இந்தியா

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளதாக இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

“இருநாடுகளுக்கும் இடையில் உயர்மட்ட சந்திப்புகள் மூலம், இருதரப்பு உறவுகள் வலுவடைந்து, புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது.

1999ஆம் ஆண்டு சுதந்திர வர்த்தக உடன்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட பின்னர், இலங்கையின் ஏற்றுமதி 13 மடங்கால் அதிகரித்துள்ளது.

இந்த உடன்பாட்டினால் யார் அதிகம் பயனடைந்தது என்பதை இது வெளிப்படுத்துகிறது.

இலங்கையும்  இந்தியாவும் வலுவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. பாதுகாப்புப் பயிற்சிகளில் புதுடெல்லியில் மிகப்பெரிய பங்காளராக கொழும்பு இருக்கிறது.

இலங்பாகையின்  பாதுகா ப்பு இந்தியாவின் நலனுடன் தொடர்புடையது.

எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசியல்தீர்வின் மூலம், இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் இந்த அரசியல்தீர்வு அமைய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad