புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2016

பிரெக்ஸிட்டும் பிரிட்டனும்...


  • David-Cameron.jpg
ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதற்கான "பிரெக்ஸிட்' பொது வாக்கெடுப்பில், பிரிட்டன் அதில் தொடரக் கூடாது
என்று அந்நாட்டு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இந்த முடிவால் உலக அளவில் பலத்த மாற்றங்களுக்கு வித்திடப்பட்டுள்ளது.
உலகப் போர்களுக்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடுகளிடையே அரசியல், பொருளாதார ஒத்துழைப்பின் தேவை உணரப்பட்டபோது ஐரோப்பியக் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சி தொடங்கியது. ஐரோப்பாவிலுள்ள ரஷ்யா உள்ளிட்ட 51 நாடுகளில் 28 நாடுகள் ஒரே கூட்டமைப்பாகச் செயல்பட சம்மதித்தன; 1992-இல் ஐரோப்பியக் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக உதயமானது.
அமைப்பின் வரையறை: ஐரோப்பியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது, அதற்கென பொதுவான ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய மையம் ஆகியவை உருவாக்கப்பட்டன. அவற்றில் உறுப்பு நாடுகள் அனைவரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதன் துணை அமைப்பாக யூரோ பகுதி உருவாக்கப்பட்டது. ஐரோப்பாவுக்கான பொது நாணயமே "யூரோ'. இதை ஐரோப்பியக் கூட்டமைப்பிலுள்ள 28 நாடுகளில் 19 நாடுகள் மட்டும் தங்கள் பொது நாணயமாக ஏற்றுக்கொண்டுள்ளன. பிரிட்டன் இதை ஏற்கவில்லை. "பவுண்ட் ஸ்டெர்லிங்' நாணயம் பிரிட்டனின் நாணயமாகத் தொடர்ந்தது.
இந்த ஐரோப்பியக் கூட்டமைப்பில் ஆரம்பகால உறுப்பினராக, 1973 முதல் இருந்து வந்தது பிரிட்டன். ஆனால், தற்போது, அதில் நீடிக்கத் தேவையில்லை என்று பிரிட்டன் மக்களில் 51.9 சதவீதம் பேர் தீர்மானித்துவிட்டனர். கூட்டமைப்பில் தொடர 48.1 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததால், ஜனநாயக முறைப்படி, ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகி உள்ளது.
1975- 2016 வாக்கெடுப்புகள்: பிரிட்டனில் பிரபுத்துவக்கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் 1973-இல் ஐரோப்பியக் கூட்டமைப்பில் அந்நாடு இணைந்தது. ஆனால், 1974 தேர்தலின்போது, தாங்கள் வென்றால் ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் சேர்ந்தது குறித்து மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்துவோம் என்று தொழிலாளர் கட்சி அறிவித்தது. தேர்தலில் வென்று ஆட்சியும் அமைத்தது.
அதன்படி 1975-இல் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, பதிவான வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு (67 சதவீதம் பேர்) பிரிட்டன் ஐரோப்பியக் கூட்டமைப்பில் நீடிக்க ஆதரவு கிடைத்தது.
ஆயினும் காலச்சூழலில் பிரிட்டன் மக்களிடையே இந்த இணைப்புக்கு எதிரான கருத்துகள் தோன்றின. இந்த இணைப்புக்குக் காரணமான பிரபுத்துவக் கட்சியே, 2015 பொதுத்தேர்தலின்போது, தாங்கள் வென்றால் ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மக்களின் கருத்து வாக்கெடுப்பு 2017-க்கு முன் நடத்தப்படும் என்று அறிவித்தது. அத்தேர்தலில் வென்ற பிரபுத்துவக் கட்சியின் சார்பில் டேவிட் கேமரூன் பிரதமரானார்.
1993-இல் பிரிட்டனில் உதயமான வலதுசாரிக் கட்சியான ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சி (யுகேஐபி), ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் தொடர்வதால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுவதாக பிரசாரம் செய்து வலுப்பெற்றது. அதன் அதீத வளர்ச்சியால் கவலையடைந்த பிரபுத்துவக் கட்சி தனது செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள இந்த பொது வாக்கெடுப்பை (பிரெக்ஸிட்) நடத்தத் தீர்மானித்தது.
இதனிடையே பிரிட்டன் அரசிலுள்ள அமைச்சர்கள், பிரபுத்துவக் கட்சியின் பிரமுகர்கள் பலரும்கூட, ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், பிரிட்டன் பிரதமர் கேமரூன், கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வாக்களிக்குமாறு மக்களைக் கோரினார். இந்தச் சூழ்நிலையில்தான் ஜூன் 23-இல் பிரெக்ஸிட் வாக்கெடுப்பு நடந்தது. தற்போது ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவது தெளிவாகியுள்ளது.
உள்நாட்டில் பிரிவினைகள்: இந்த வாக்கெடுப்பில் இரு கேள்விகளே பிரதானமாக முன்வைக்கப்பட்டன. ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்கலாமா? அல்லது விலக வேண்டுமா? ஆகியவையே அக்கேள்விகள். இதனால் யுகேஐபி கட்சியைத் தவிர்த்து, பிரிட்டனிலுள்ள பிரபுத்துவக் கட்சி, தொழிலாளர் கட்சி, பசுமைக்கட்சி ஆகிய அனைத்துக் கட்சிகளிலும் இருவேறு கருத்துகள் உருவாகிவிட்டன.
தற்போது ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்கக் கூடாது என்ற தீர்ப்பின் மூலமாக, அந்நாட்டு அரசு, வர்த்தகம், ஐரோப்பியக் கூட்டமைப்பு, உலகச் சந்தைகள் அனைத்துக்கும் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் பிரிட்டன் மக்கள்.
பிரெக்ஸிட்டில் பங்கேற்ற 3.35 கோடி மக்களில் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று கூறியவர்களைவிட அதிகமாக 13 லட்சம் பேர், விலகுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
1975 வாக்கெடுப்பின்போது இங்கிலாந்து மக்களில் 67 சதவீதம் பேர் கூட்டமைப்பை ஆதரித்தனர். தற்போது 53 சதவீதம் பேர் மட்டுமே வெளியேற்றத்தை ஆதரித்துள்ளனர். வேல்ஸ் பகுதியிலும் 52 சதவீதம் பேர் வெளியேற்றத்தை ஆதரித்துள்ளனர்; 1975-இல் இப்பகுதியில் 35 சதவீதம் பேரே வெளியேற்றத்தை ஆதரித்தனர்.
யுனைடெட் கிங்டம் (யு.கே.) எனப்படும் இங்கிலாந்திலுள்ள நாடுகளிடையிலான அரசியல் மாறுபாடுகளையும் இந்த வாக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு காணப்பட்ட நிலையில், ஸ்காட்லாந்து, அயர்லாந்து பகுதிகளில் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தலைநகர் லண்டனிலுள்ள மக்களில் 60 சதவீதம் பேர் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க ஆதரவு தெரிவித்தனர். ஆனால், மொத்தமுள்ள 12 மாகாணங்களில் 9 மாகாணங்கள் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தன. இந்த முடிவுகள் பிரிட்டனின் அரசியல் உறுதிப்பாட்டுக்கு சிக்கலாக பிற்காலத்தில் உருவாகக் கூடும். ஸ்காட்லாந்தும் அயர்லாந்தும் இங்கிலாந்திலிருந்து விரைவிலேயே பிரிந்துவிடக்கூடும்

ad

ad