சனி, ஜூன் 04, 2016

இன்று யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு புணர்நிர்மாணம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் குழு தெரிவானது பற்றியும், இதற்கு உறுதி எழுதியது, (வெளிப்படுத்தல்), யாப்பு தயாரித்தது, கழகத்தை பதிவு செய்வது, மற்றும் ஒப்பந்தகாரர்களை தெரிவு செய்வது என்பன கலந்துரையாடப்பட்டது. யாப்பு தயாரிக்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்டது. இவற்றுக்கு தகுந்த விளக்கமளித்து பேராசிரியர் கா.குகபாலன் பேசினார். அம்பலவாணர் அரங்கு சம்பந்தமான கூட்டம் லண்டன், சுவிஸ், பிராண்ஸ், கனடா போன்ற இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது போல் எம்மவர்கள் ஒன்று திரண்டிருப்பது முக்கியமானதாகும்.