புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2016

திருச்சி தடுப்பு முகாமில் நான்காவது நாளாக பட்டினிப்போராட்டம்!

தமிழகம்,திருச்சியிலுள்ள சிறப்பு தடுப்பு முகாமில் இலங்கை அகதிகள் நான்கு பேர் தங்களை குடும்பத்தோடு சேர்ந்து வாழ

அனுமதிக்க வேண்டி காலவரையறையற்ற பட்டினிப்போராட்டத்தினை ஆரம்பித்து இன்றுடன் நான்காவது நாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். க.செந்தில்குமார்,மூ.பிரதீப்,ச.பிரதீபன்,சு.ஸ்ரீஸ்வரராஜா ஆகியோரே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் தடுப்பு முகாம் சென்ற திருச்சி மாவட்ட இலங்கை அகதிகளுக்கான தனித்துணை ஆட்சியர் மற்றும் Q பிரிவு திருச்சி மாவட்ட பொறுப்பதிகாரி ,மாநகர துணை கமிசனர் ஆகியோர் நான்கு அகதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், திடமான வாக்குறுதிகளை அவர்கள் வழங்காததால் நான்கு ஈழ அகதிகளும்  உண்ணாவிரதத்தினை கைவிட மறுத்துவிட்டனர்.
தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களில் அவுஸ்த்ரேலியா செல்ல முற்பட்ட வழக்கிலும்,விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், ஜாமீனில் இவர்களை நீதிமன்றம் விடுதலை செய்த பின்னர் சிறை வாசலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம் எனும் தடுப்பு முகாமில் பல வருடங்கள் குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி அடைக்கப்படுகின்றனர்.
திருச்சி சிறப்பு முகாமில் எட்டு வருடங்களாக கூட சில ஈழ அகதிகள்  அடைத்து வைக்கப்பட்டிருப்பதும்  இவர்களின் விடுதலைக்காக அவ்வப்போது சில அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தாலும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்காதது மிகவும் வேதனையான விடையமாகும்.

ad

ad