புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2016

பிரான்ஸின் நீஸ் நகரில் சுதந்திர தின வாணவேடிக்கை பார்த்த மக்கள் மீது கனரக தாக்குதல் பலி 131 ஆக உயர்வு

 இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 பேராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸின் நீஸ் நகரில் நடைபெற்ற சுதந்திர தின  வாணவேடிக்கைவிழா ஒன்றில் பங்கேற்றிருந்த மக்கள் கூட்டம் மீது லொறி ஒன்றை ஏற்றி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸின் தென் பகுதி நகரான நைஸில் நடைபெற்ற Bastille Day நிகழ்வில் பங்கேற்றவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வான வேடிக்கைக் காட்சியின் பின்னர் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஒர் பயங்கரவாத தாக்குதலாகவே சந்தேகம் எழுகின்றது என ஜனாதிபதி பிரான்ஸிஸ் ஹொலண்டே தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்ஸில் மூன்று மாத காலத்திற்கு அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரான்ஸில் அவசரகால நிலைமை அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான தாக்குதல்களை தடுக்க சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சம்பவத்தில் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 18 பேரின் நிலை கவலைக்கிடமாக அமைந்துள்ளது.
மக்கள் செறிந்த பகுதிகளுக்கு சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திற்கு லொறி கொடூரமான நோக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை சாரதி மட்டும் மேற்கொண்டாரா அல்லது வேறும் நபர்களுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் எந்தவொரு தரப்பினரும் தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சின் தென்பகுதியில் உள்ள நைஸ் நகரில், நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் ஒன்றில் 75 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேருக்கு மேல் காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சின் தேசிய நாள் கொண்டாட்டத்துக்காக பெருமளவு மக்கள் திரண்டிருந்த பகுதி ஒன்றினுள், பாரஊர்தி ஒன்றை வேகமாகச் செலுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் பாரஊர்தியில் சிக்கி குறைந்தது 75 பேர் பலியானதாகவும், 100இக்கும் அதிகமானோர் காயமடைந்தாகவும், பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையடுத்து, பாரஊர்தியின் ஓட்டுனர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொடூரமான இந்த தீவிரவாத தாக்குதலைக் கண்டிப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.nice-killings-1

ad

ad