புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2016

தெற்கு சூடான் சென்றடைந்தது இந்திய போர் விமானம் சி-17 இந்தியர்கள் வெளியேற சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தல்

தெற்கு சூடான் நாட்டில்  உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை  மீட்டு கொண்டு வர டெல்லியில் இருந்து இந்திய போர் விமானம் சி-17, சூடானின் சூபா நகருக்கு சென்றுள்ளது.

சூடானில் இருந்து பிரிந்த தெற்கு சூடானில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரியக் மாசர் ஆகிய இருவருக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது.

இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், தெற்கு சூடானில் உள்நாட்டுப் போரால் சுமார் 600 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக நேற்று உயரதிகாரிகளுடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, அந்நாட்டில் உள்ள இந்தியர்களை தாயகத்திற்கு கொண்டு வருவதற்காக, தெற்கு சூடான் நாட்டுக்கு 2  C-17 ரக சிறப்பு விமானங்கள் இன்று காலை புதுடெல்லியில் இருந்து புறப்பட்டது. இந்நிலையில் சூபா நகருக்கு அந்த விமானம் சென்றடைந்தது.

சூடானில் தவித்து வரும் குழந்தைகள், பெண்கள், ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் 5 கிலோ வரை பொருட்கள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.  இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருவதே எங்களின் இலக்கு என மத்திய வெளியுறத்துறை இணை மந்திரி வி.கே.சிங் கூறியுள்ளார். மேலும் அங்குள்ள இந்தியர்கள் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்று சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தி உள்ளார்.

ad

ad