புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2016

பாடசாலைக்குச் செல்லாது 18 வயது இளைஞரோடு குடும்பமாக இருந்த சிறுமி

பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் 15 வயது மாணவி ஒருவர் குடும்பமாக வாழ்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களை இனங்கண்டு மீண்டும் அவர்களைப் பாடசாலைகளில் இணைக்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி நீதவான் பணிப்புக்கமைய செயற்படுத்தப்படுகின்றது.

மலையாளபுரம், பாரதிபுரம், பொன்னகர், கிராமங்களில் சில நாட்களாக திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நேற்றும் அவ்வாறு சோதனை நடத்தப்பட்டதில், 14 சிறுவர்கள் இனங்காணப்பட்டனர். அவர்களை பாடசாலையில் இணைக்கும் செயற்பாடுகள் முன்னகர்த்தப்பட்டன.

பொன்னகர்ப் பகுதியில் 15 வயதுச் சிறுமி  பாடசாலை செல்லாதுள்ளார் என்ற தகவல் கிடைத்தது. அதிகாரிகள் அங்கு சென்றபோது அந்தச் சிறுமி 18 வயது இளைஞருடன் குடும்பமாக வாழ்வதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

குறித்த  சிறுமி சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது 

ad

ad