புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2016

அரசு வேலைகள் வாங்கித்தருவதாக 2 கோடி மோசடி: கணவர் கைதான அதிர்ச்சியில் மகள்களுடன் மனைவி தற்கொலை!



         தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நேர்மையாக பயன்படுத்தி நல் வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக முறைகேடாக சம்பாதித்து கோடிகளை குவிக்க வேண்டும் என்கிற பேராசையால் குடும்பத்தையே இழந்து நிற்கதியாக நிற்கிறார் முன்னாள் அரசு ஊழியர். 

       மின்துறையில் வேலை வாங்கித்தருவதாக 14 பேரி டம் ரூ.80 லட் சம் மோசடி செய்த இந்து அறநிலையத்துறை ஊழியர் தேவராஜன் கைது செய்யப்பட்ட ஒருவாரத்தில் அவமானம் தாங்காமல் அவர் மனைவி, பிள்ளைகள் என மூவரும் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படித்தியுள்ளது. 

   கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல புதுத்தெருவை சேர்ந்தவர் தேவரா ஜன்(64). இவர் சேத்தியாத்தோப்பு பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பணியின்போது  லஞ்சம் வாங்கிய புகாரின் பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளார்.  தேவராஜன் வருவாய் ஆய்வாளராக இருந்த காலகட்டத்தில்  சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்த மனோகர்(50) என்பவருடன் தேவராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரிடம் தனக்கு மின் துறையில் அதிகாரிகளை தெரியும். அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ஆட்களை தேர்வு செய்து தருமாறும் கூறியுள்ளார்.

  அதன் பேரில் மனோகர் அவருக்கு தெரிந்த 14 பேரி டம் ரூ.79.7 லட் சம் பெற்று தேவராஜிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற தேவரா ஜன் கடந்த 2014-15ம் ஆண்டு, 14 பேருக்கான பணி நியமன ஆணையை வழங்கி உள் ளார். அதனை பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் கொடுத்த பணி நியமன ஆணை அனைத் தும் போலி என சம்பந் தப்பட்ட அதிகாரிகள் கூறினர்.

      இதுகுறித்து கடலூர் குற்றப்பிரிவு காவல் துறையில் மனோகர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தேவராஜனை தேடி வந்த னர். இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி சென்னையில் தேவராஜன் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில், அங்கு சென்ற கட லூர் குற் றப்பிரிவு போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து கட லூர் கொண்டு வந்து கடலூரில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  தேவரா ஜன் பலரிடம் இதுபோன்று அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ. 2 கோடி அளவில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

          இந்நிலையில் தேவராஜன் மோசடி செய்து சிறைக்கு சென்ற அவமானம் தாங்காமல் சென்னை எம்.ஜி.ஆர் நகர் வீட்டில் தேவராஜனின் மனைவி கலைவாணி மற்றும் அவர்களின் இரண்டு மகள்களும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.

        தொடக்க காலத்திலேய முறைகேடாக பணம் சம்பாதிக்க முயன்ற போதே தேவராஜனின் மனைவி கண்டித்து தடுத்திருந்தால் இப்போது இந்த அவமானமும், உயிரிழப்புகளும் ஏற்பட்டி ருக்காது. தண்டனை முடிந்து நாளை தேவராஜன் வெளியில் வரும்போது அவருக்கு ஆதரவளிக்க அவரது உறவுகள் யாரும் இல்லை, அவரது ரத்த உறவுகள் அவரை தனித்து விட்டுச் சென்ற வேதனையிலிருந்து அவர் எப்படி தன்னை காத்து கொள்ளப்போகிறார்.  

     அரசாங்க வேலை கிடைக்கவில்லையே என்று கோடிக்கணக்கான பட்டதாரிகள் காத்துக்கிடக்க கிடைத்த வாய்ப்புகளை முறைகேடாக பயன்படுத்துபவர்களுக்கு தேவராஜனின் வாழ்க்கை ஒரு பாடம்.

ad

ad