புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2016

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சிக்கு 21 மாத ஜெயில் தண்டனை விதித்து பார்சிலோனா
கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது.
கால்பந்து புயல் மெஸ்சி
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் 29 வயதான லயோனல் மெஸ்சி. உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 5 முறை வென்ற சாதனையாளர். குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்று விட்ட மெஸ்சி, களத்தில் இறங்கி விட்டால் பம்பரமாக சுழன்று ரசிகர்களை கவர்ந்து விடுவார். அவருக்கு என்று உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாம் உண்டு.
ஆனால் கிளப்புக்காக சாதிக்கும் மெஸ்சி, தங்களது தேசிய அணிக்காக சோபிப்பதில்லை என்ற விமர்சனங்கள் அடிக்கடி எழுவது உண்டு. அண்மையில் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து இறுதி ஆட்டத்திலும் அர்ஜென்டினா வழக்கம் போல் மண்ணை கவ்வியது. இதன் இறுதி ஆட்டத்தில் சிலியிடம் தோல்வி அடைந்தது. இதனால் விரக்தி அடைந்த மெஸ்சி சர்வதேச கால்பந்துக்கு முழுக்கு போடுவதாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால் ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று தெளிவுப்படுத்தினார்.
வரி ஏய்ப்பு வழக்கு
இந்த பரபரப்பு ஓய்வதற்குள் மெஸ்சி அடுத்த பிரச்சினையில் சிக்கி விட்டார்.
ஸ்பெயின் கிளப் அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி 2007 முதல் 2009–ம் ஆண்டு இடையிலான காலக்கட்டத்தில் தனது புகைப்படம், லோகோ, பனியன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் உரிமத்தை பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்து வழங்கிய வகையில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். இவ்வாறு பெற்ற தொகைக்கு ஸ்பெயினில் வரி செலுத்துவதை தவிர்ப்பதக்காக ஹோண்டுராஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, உருகுவே போன்ற நாடுகளில் உள்ள கம்பெனிகளில் முதலீடு செய்தார்.
இதை கண்டுபிடித்த ஸ்பெயின் வருமான வரித்துறையினர், மெஸ்சி மீது50m Euroவரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு பார்சிலோனா கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் போது ஆஜரான மெஸ்சி, தனது மீதான குற்றச்சாட்டை மறுத்தார். ‘‘கால்பந்து விளையாடுவதில் மட்டுமே எனது கவனம் இருக்கும். மற்ற விஷயங்களை எனது தந்தை பார்த்துக்கொள்வார். இது தொடர்பான ஒப்பந்த ஆவணங்களில் படிக்காமல் நான் கையெழுத்திட்டேன். ஏனெனில் எனது வர்த்தக விவகாரங்களை கவனிக்கும் எனது தந்தை மற்றும் ஆலோசகர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. எந்த தவறையும் செய்ய தந்தை அனுமதிக்க மாட்டார்’ என்று கூறினார்.
21 மாத தண்டனை
இந்த நிலையில் இந்த வழக்கில் மெஸ்சிக்கு 21 மாத சிறை தண்டனையும், 30 M euro அபராதமும் விதித்து பார்சிலோனா கோர்ட்டு நேற்று பரபரப்பான தீர்ப்பு கூறியது. இதே போல் அவரது தந்தை ஜார்ஜ் ஹோராசியா மெஸ்சிக்கு 21 மாத சிறையுடன் 30 M euroஅபராதமாக விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் ஸ்பெயின் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடியும்.
ஆனால் ஸ்பெயின் சட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனை விதிக்கப்படுபவர்கள், நன்னடத்தை காலக்கட்டத்தில் கீழ் வருவதால், சிறைவாசம் அனுபவிக்க தேவையில்லை. இதனால் மெஸ்சிக்கு பெரிய அளவில் சிக்கல் வராது.
இந்த பிரச்சினை எழுந்ததும் மெஸ்சியும், அவரது தந்தையும் தாமாக முன்வந்து, வரியுடன் வட்டியையும் சேர்த்து செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

ad

ad