புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2016

பெஷில் ராஜபக்ச மீண்டும் கைது

ஸ்ரீலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஷில் ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் சற்று முன்னர்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த திவிநெகும நிதியத்திற்குரிய நிதியை பயன்படுத்தி பிளாஸ்ரிக் குழாய்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்மூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இன்று அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பெஷில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்
இதற்கமைய அவர் நீதிமன்றில் விரைவில் நிறுத்தப்படுவார் என்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
திவிநெகும நிதியத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் பெஷில் ராஜபக்ச கைதுசெய்யப்படுவது இது இரண்டாவது தடவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை அடுத்து ஜனவரி 10 ஆம் திகதி உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறிய பெஷில் ராஜபக்ச, மீண்டும் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நாடு திரும்பியிருந்தார்.
இதனையடுத்து மறுநாளான 2015 ஏப்ரல் 22 ஆம் திகதி திவி நெகும நிதியத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் நிதியத்தின் ஆணையாளர் உட்பட மூவருடன் பெஷில் ராஸபக்ச கைதுசெய்யப்பட்டிருந்தார்.
பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அவர் கடந்த மே மாதம் 12 ஆம் திகதி மாத்தறை காணி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு மாத்தறை நீதிமன்றில் நிறுத்தப்பட்டு அன்றைய தினமே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து 2016 யூன் மாதம் 6 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்திலுள்ள காணி விவகாரம் தொடர்பில் மீண்டும் கைதுசெய்யப்பட்ட பெசில் ராஜபக்சவிற்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே இன்று நான்காவது தடவையாக பெஷில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad