புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2016

சுவாதியின் கடைசி எஸ்எம்எஸ் இதுதான்!

தன்னை ஒருவன் பின்தொடர்ந்து வருவதாக தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு சுவாதியை கடைசியாக எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் திகதி சுவாதி மர்மநபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில், ராம்குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சுவாதிக்கும், ராம்குமாருக்கும் இடையே என்ன பிரச்னை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் தனிப்படை பொலிஸ் உயரதிகாரி ஒருவர்.
அவர் கூறுகையில், சுவாதியின் வீடு சூளைமேடு, தெற்கு கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ளது. அவர் பணியாற்றிய இடம் செங்கல்பட்டு பரனூரில் உள்ள ஐ.டி நிறுவனம். தினமும் சூளைமேடு நெடுஞ்சாலையை கடந்து சௌராஷ்ரா நகர் 8வது தெரு வழியாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சுவாதி செல்வது வழக்கம்.
அப்போது ஏ.எஸ் மேன்சனில் தங்கி இருந்த ராம்குமார் அவரைப் பார்த்துள்ளார். ராம்குமாருக்கு, சுவாதி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. சுவாதி வரும் காலை நேரத்துக்கு தவறாமல் ஆஜராகி உள்ளார் ராம்குமார். பிறகு, சுவாதியை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
பெருமாள் கோயிலுக்கு செல்லும் பழக்கம் உள்ள சுவாதிக்காவே ராம்குமாரும் அங்கு சென்றுள்ளார். சுவாதியின் வேலை பார்க்கும் இடத்தை தெரிந்து கொள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
டிக்கெட் எடுக்க சென்ற சுவாதியின் அருகிலேயே அவரும் நின்றிருக்கிறார். கறுப்பாக, ஒல்லியாக கிராமத்து சாயலில் உள்ள கட்டட வேலைப்பார்க்கும் இளைஞன் ஒருவன் தன்னையே பார்ப்பதை சுவாதி தன்னுடைய நெருங்கிய தோழியிடம் சொல்லியுள்ளார்.
ஆனால் அவர்கள் அதை பெரியளவில் கண்டுக்கொள்ளவில்லை. இதை தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ் கடைசியாக அனுப்பியுள்ளார். அந்த எஸ்.எம்.எஸ் இப்போது எங்கள் வசம் உள்ளது.
இதன்பிறகு சுவாதியின் பின்தொடர்ந்து சென்ற ராம்குமார், அவர் வேலைபார்க்கும் இடம் வரை சென்று விட்டு ரயிலில் திரும்பி வந்துள்ளார். கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி, டிக்கெட் பெற வரிசையில் காத்திருந்த போது அவரது பின்னால் ராம்குமார் நெருங்கி நின்றுள்ளார்.
தர்மசங்கடத்தில் தவித்த சுவாதி, இதன்பிறகு மே 10ம் திகதி அவரது நெருங்கிய நண்பருக்கு ராம்குமாரின் டார்ச்சர் குறித்து எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார்.
சுவாதிக்காக அந்த நண்பரும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்து ராம்குமாரைப் பார்த்துள்ளார். சுவாதியுடன் அவரைப் பார்த்ததும் ராம்குமார் அமைதியாகவே இருந்துள்ளார். அதன்பிறகு சில நாட்கள் அவர் சுவாதியை பின்தொடரவில்லை.
சுவாதி, இந்தத் தகவலை இலைமறை காயாக வீட்டில் சொல்லிய பிறகு அவரை பைக்கில் அழைத்து வந்துள்ளார் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன்.
ஆனாலும், சுவாதியை பின்தொடர்வதை ராம்குமார் நிறுத்தவில்லை. சுவாதியிடம் தன்னுடைய காதலை ராம்குமார் சொன்ன போது, அவரை ‘தேவாங்கு போல இருக்கும் உனக்கு……’ (அதற்கு மேல் உள்ள வார்த்தையை இங்கு குறிப்பிட முடியாது) என்று ஆத்திரத்தில் சுவாதி திட்டியுள்ளார்.
இது ராம்குமாருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவே ராம்குமார், சுவாதியை கொலை செய்ததற்கு முக்கிய காரணம்” என்றார்.
இந்நிலையில் சுவாதிக்கும், ராம்குமாருக்கும் இடையே பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் உலாவருகின்றன.

ad

ad