புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2016

நல்லிணக்கபொறிமுறை செயலணிக்கு புலம்பெயர் அமைப்புக்களிடமும்யோசனைகள் எதிர்பார்ப்பு!

லங்கையில் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி, புலம்பெயர் அமைப்புக்களிடம் இருந்தும் யோசனைகளை பெறுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இம்மாதம் 28ஆம் திகதிக்குள் புலம்பெயர் அமைப்புக்கள்  யுத்தக் குற்ற விசாரணைக்காக அமைக்கப்படவுள்ள உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறை உள்ளிட்ட செயல்திட்டங்கள் குறித்த தமது கருத்துக்களை செயலணிக்கு அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை, நீதி ஆகியவற்றைக் கண்டறிந்து, பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தி இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைக்கப்பட வேண்டிய கட்டமைப்புகள், மற்றும் செயன்முறை நடவடிக்கைகள் பற்றி கலந்தாலோசிப்பதற்காகவே இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட வழக்குத் தொடுநரை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறை, உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள்நிகழாமைக்கான ஆணைக்குழுக்கள், காணாமல் போனோர் தொடர்பான விடையங்களை அணுகுவதற்கான அலுவலகம் உட்பட நீதிப் பொறிமுறைகளை அமைப்பதற்கான ஒரு முன்னோடிச் செயற்பாடாக பொது மக்களின் கருத்துக்களை அறிவதற்காக 11 உறுப்பினர்களைக் கொண்ட செயலணியொன்றை  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைத்திருந்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையில் அமைக்கப்பட்ட இந்த செயலணி நாடு முழுவதிலும், குறிப்பாக பாதிப்புக்குள்ளானோரின் கருத்துக்களை அறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்கமைய பொது அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரங்களில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளை மேற்கொள்ளும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை இந்த செயலணியிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

இதற்கமைய புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டுவருகின்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளிடமும் கருத்துக்களைப் பெறுவதற்கான அறிவிப்பை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அந்த செயலணியின் செயலாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, இதற்கமைய பலம்பெயர் அமைப்புக்கள் ஜுலை 28 ஆம் திகதிக்குள் தமது யோசனைகளையும், கருத்துக்களையும் முன்வைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

ad

ad