புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2016

சுவாதியை ராம்குமாருக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தானா..

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி மென்பொருள் பொறியாளர் சுவாதி,
பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் எட்டு நாட்களுக்குப் பிறகு துப்பு துலங்கியது.
நெல்லை மாவட்டம், செங்கோட்டை, மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரிடம் சிக்குவதற்கு முன் ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது ராயபேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுவாதியும், ராம்குமாரும் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாகி இருக்கிறார்கள். அதன்பிறகு சுவாதியின் வீட்டின் அருகே உள்ள மேன்ஷனில் தங்கிய ராம்குமார், அவரை பின்தொடர்ந்துள்ளார். ராம்குமாரின் காதல் எண்ணத்தை அறிந்த சுவாதி, அவரிடமிருந்து விலகியுள்ளார். அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் ராம்குமார், சுவாதியை கொலை செய்துள்ளார் என்று தனிப்படை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் சுவாதிக்கும், ராம்குமாருக்கு எப்படி நட்பு ஏற்பட்டது என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்தனர். அதில் புதிய தகவல் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ''சுவாதியும், சூர்யபிரகாஷ் என்பவரும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருந்துள்ளனர். அதே நேரத்தில் சூர்யபிரகாசும், ராம்குமாரும் ஃபேஸ்புக் நண்பர்கள். இந்த நட்பு வட்டாரத்தில் சூர்யபிரகாஷ் மூலமாகவே சுவாதியின் நட்பு ராம்குமாருக்கு கிடைத்துள்ளது.

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை போலீஸார் ஒருவார காலம் தேடிய நேரத்தில், சூர்யபிரகாஷ் அமைதியாகவே இருந்துள்ளார். ஆனால் ஆசிரியர் தமிழ்ச்செல்வன், ராம்குமாரின் அறையில் தங்கிய காவலாளி நடேசன், மேன்சன் காவலாளி கோபால் ஆகியோர் தங்களுக்குத் தெரிந்த விவரங்களை எங்களிடம் தெரிவித்தனர். அந்த தகவல் மூலம் குற்றவாளியை நெருங்க முடிந்தது.

மேலும், சுவாதியின் நெருங்கிய நண்பரான திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது பிலால் சித்திக், போலீஸாருக்கு பல முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். ஆனால் சுவாதி கொலை தொடர்பாக அவரது ஃபேஸ்புக் நண்பரான சூர்யபிரகாஷ் எந்தத் தகவலையும் எங்களுக்கு தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.  ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். அப்போது சூர்யபிரகாஷ் குறித்து ராம்குமாரிடமும் விசாரணை நடத்தப்படும்

ad

ad