புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2016

மருத்துவம் படிக்க தவித்த மாணவிக்கு முதல்வர் ஜெ. உதவி


   புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் பூசாரி தெரிவில் வசிக்கும் வல்லத்தரசு சில ஆடுகளை வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். அவரது மகள் மேகலா நடப்பு ஆண்டு 12 ம் வகுப்பு பொது தேர்வில் 1129 மதி்ப்பெண்களும் 196.25 கட் ஆப் வாங்கி  திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இலவச இடம் கிடைத்தும் அந்த படிப்பை தொடர பண வசதி இல்லாமல் தவித்த மாணவி பெற்றோருடன் ஆடு மேய்க்கச் செல்கிறார் என்ற செய்தியை வெள்ளிக் கிழமை நக்கீரன் இணையத்தில் படங்களுடன் செய்தியாக வெளியிட்டோம். 

    அந்த செய்தி வெளியான சில மணி நேரத்தில் நம்மை தொடர்பு கொண்ட பலரும் மாணவி மேகலாவுக்கு உதவி செய்ய முன்வந்தனர். 

   இந்த நிலையில் இன்று சனிக் கிழமை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. இலவச இடம் கிடைத்தும் படிக்க வசதியின்றி ஆடு மேய்க்கும் மாணவி மேகலாவின் படிப்பு செலவு ரூ. 75 ஆயிரத்தை எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் என்று அறிவித்தார். 

   இந்த அறிவிப்பை பார்த்த மாணவி மேகலா மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் நக்கீரன் இணைய செய்தி பார்த்து எங்களுக்கு படிப்புக்கு உதவிய முதலமைச்சர் மற்றும் உதவ முன்வந்த நல்ல உள்ளங்களுக்கும் நக்கீரன் இணையத்துக்கும் நன்றிகளை சொல்வதாக நெகிழ்ந்தனர்.

     ஏழை மாணவி படிக்க பணம் தடை என்றால் அது இந்த மனித இனத்துக்கே அவமானம். ஆனால் நல்ல உள்ளங்கள் உதவி செய்திருப்பது மகிழ்ச்சி தான்.

ad

ad