புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2016

கை விலங்குடன் நாமல் : கட்டி தழுவிய யோசித

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பதற்காக கைவிலங்குடன் பொலிஸாரால் அழைத்துச்
செல்லப்பட்ட நாமல் ராஜபக்ஷவை பார்வையிட சென்ற யோசித ராஜபக்ஷ கட்டியனைத்து சகோதர பாசத்தை வெளிப்படுத்தினார்.
இந்­திய நிறு­வ­ன­மான கிரிஷ் குழுமம் றக்பி விளை­யாட்­டினை மேம்­ப­டுத்தும் முக­மாக போட்டித் தொடர் ஒன்­றினை நடத்த கடந்த 2013 ஆம் ஆண்டு வழங்­கி­ய­தாகக் கூறப்­படும் 70 மில்­லியன் ரூபா நிதி­யினை தவ­றாக தனது சொந்தத் தேவைக்கு பயன்­ப­டுத்­தினார் என்ற மோசடி குற்­றச்­சாட்டின் பேரில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் மூத்த புதல்வரும் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ஷ நேற்று கைது செய்­யப்­பட்டார்.
நிதிப் புல­னாய்வு பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட நாமல் ராஜ­பக்ஷ எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.
நிதிக் குற்ற புல­னாய்வுப் பிரிவின் 7 ஆம் இலக்க விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அனுர பிரே­ம­ரத்ன தலை­மை­யி­லான பொலிஸ் குழு அவரை நேற்று கைது செய்து கோட்டை பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர் செய்த போதே நீதிவான் இந்த உத்­த­ர­வினைப் பிறப்­பித்தார்.
இந்நிலையில் நாமலை பார்வையிட சகோதரர்களான யோசித ராஜபக்ஷ, ரோகித ராஜபக்ஷ மற்றும் அரசியல் வாதிகள் பலர் கோட்டை நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.
நீதிமன்றிலிருந்து கைவிங்குடன் வந்த நாமல் சகோதரரான யோசித ராஜபக்ஷவை கண்டவுடன் கட்டி தழுவினார்.
பின்னர் கைதிகளை ஏற்றிச் செல்லும் பஸ்ஸில் நாமல், வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டார்.

ad

ad