புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2016

பொருளாதார மத்திய நிலையம் ஒமைந்தையில் அமையும்?

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ன் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஓமந்தையை தெரிவு செய்வதற்கு 21 பேரின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2,000 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ள இந்த பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தில் அமைக்குமாறு மத்திய அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், வவுனியாவில் எந்த இடத்தில் அமைப்பது என்பது தொடர்பில் பல குழப்பங்கள் தோன்றின.

பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தினை தெரிவு செய்வதற்கான அதிகாரம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கீழ் இருந்தமையால், அவரின் தெரிவாக ஓமந்தை இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்தில் அமைக்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில மாகாண சபை உறுப்பினர்களும் கோரினர்.

இந்த இழுபறி நிலையத் தீர்க்கும் பொருட்டு, முதலமைச்சர் அலுவலகத்தால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வாக்குச்சீட்டு அனுப்பப்பட்டது.

வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை முடிவுற்ற நிலையில், பொருளாதார மத்திய நிலையத்தினை  ஓமந்தையில் அமைப்பதற்கு 21 உறுப்பினர்களும், தாண்டிக்குளத்தில் அமையப் பெறுவதற்கு 5 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மேலும் 13 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad