புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2016

கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக அமலாக்கப்பிரிவு ஆணை


ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேட்டில் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் இணைந்து கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் சோதனை நடத்தின. இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்களுடன் சம்மந்தப்பட்ட பண பரிவர்த்தனை ஆவணங்களையும், மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற இரண்டு லட்சம் டாலர் தொடர்பான ஆவணங்களையும் சமர்பிக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான அன்வாண்டேஜ் ஸ்டாடேஜி கண்சல்டன்சி என்ற நிறுவனம் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் துணை நிறுவனம் மூலம் பிலிபைன்ஸ், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் முதலீடு செய்திருந்தது அமலாக்கப்பிரிவு சோதனையில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனிடையே அமலாக்கப்பரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராகி கார்த்தி சிதம்பரம் அவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ad

ad