புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2016

இந்திய கள ஆய்வுடன் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அற்றவகையில் பலாலி விமானநிலைய புனரமைப்பு

பலாலி விமான நிலையத்தை பொதுப் பாவனைக்காக பயன்படுத்துவது அல்லது பிராந்திய விமான சேவைகளுக்காக பயன்படுத்துவ
து தொடர்பில் இந்தியா போன்ற நாடுகளின் ஆலோசனைகளை பெற்று இலங்கையின் பிராந்திய விமான சேவைகளை மேற்கொள்வதில் சாதகமான காரணிகளாக அமையும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.
இவ்வாறான நகர்வுகளை தேசிய பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லாத வகையிலும் பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலுமே அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமானத்தளமாக பயன்படுத்துவது குறித்து கள ஆய்வை இந்தியா மேற்கோள்வதாக ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்;
விமான சேவைகள் மாத்திரம் அல்ல உள்நாட்டு புகையிரத விஸ்தரிப்பு மற்றும் வடக்கு கிழக்கு வீதி விஸ்தரிப்பு தொடர்பிலும் இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
எவ்வாறாயினும், இந்தியாவின் மூலமாக விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இலங்கை சிவில் சேவைகள் அதிகார சபையின் ஊடாகவே அணைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், இவ்வாறான நகர்வுகள் தேசிய பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லாத வகையிலும் பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலுமே அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

ad

ad