புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2016

கருணா குழுவைக் கையாளும் அணியில் இருந்தவரே லசந்த கொலை வழக்கில் கைது!

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி கருணாகுழுவை கையாளும்பணியில் ஈடுபட்டவர்
என ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் இராணுவ உளவுப்பிரிவின் முதலாம் தர அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். எனினும் நேற்று பிற்பகலே அவரின் கைது தொடர்பில் பொலிஸ் தரப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.ரேமானந்த உடலகம என்ற இந்த அதிகாரி, சீஐடியினரின் தீவிரமான விசாரணையின்பின்னரே கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். இவர், மீது சாட்சியை கடத்தியதுடன் அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற கருணா அணியுடன் இணைந்து,விடுதலைப் புலிகளின் விடயத்தை கையாளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அப்போது, இராணுவ உளவுப்பிரிவின் தலைவர் கபில ஹெந்தவிதாரணவின் கீழ் செயற்பட்டு வந்தார். 2010ம் ஆண்டில் இவர், ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகத்திலும் சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad