புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2016

தேமுதிக, தமாகாவுக்கு மீண்டும் அழைப்பு விடுப்போம்: வைகோ பேட்டி

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா வெளியேறியது. இந்த நிலையில், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், ரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் சந்தித்து பேசினார்கள்.

இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. இணைந்து அமைத்த மக்கள் நலக் கூட்டியக்கம் நிரந்தர இயக்கமாக செயல்படும். அதில் இந்த 4 கட்சிகளும் நிரந்தர உறுப்புகளாக செயல்படும். தேர்தல் நேரத்தில் கட்சிகள் வரலாம், போகலாம்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனை கருதி 4 கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுவது என்று ஏற்கனவே அறிவித்து இருந்தோம். அதன்படி, உள்ளாட்சி தேர்தலிலும், மக்கள் நலக்கூட்டணி இணைந்து தேர்தலை சந்திக்கும். அந்தந்த மாவட்டம் தோறும் உள்ள 4 கட்சிகளின் நிர்வாகிகளும் இணைந்து தேர்தல் வேலைகளை கவனிப்பார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் முறை, குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கும் முறை தான் கொண்டுவர வேண்டும். மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். எங்களுக்குள் மனக்கசப்பு ஏதும் இல்லை. எனவே, உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட தே.மு.தி.க., த.மா.கா.வுக்கு அழைப்பு விடுப்போம் என்றார்

ad

ad