புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2016

பொலிஸ் நிலையங்களுக்கு திடீர் விஜயம்!

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண,   நேற்றையதினம்   பொலிஸ்நிலையங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.இதன்போது, காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பருத்தித்துறை, அச்சுவேலி, நெல்லியடி மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.

 யாழ்.மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக சிவில் சமூகங்கத்தினரால் பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தேவையான ஆலோசனைகளை பிரதி பொலிஸ் மா அதிபர் வழங்கினர்.

மேலும், பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவ்வாறு தொடர்பினை பேணுவது? குற்றங்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் உறவு பொலிஸாருக்கு எவ்வாறு தேவை? என்பது தொடர்பில் அறிவுத்தப்பட்டது.

இவ்விஜயத்தின் போது பிராந்தியத்துக்குட்பட்ட பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.ஆர்.ரஞ்சித் மாசிங்க மற்றும் உதவிபொலிஸ் அத்தியட்சகர் சீ.வீ.மெதவெல ஆகியோர் உடனிருந்தனர். 

ad

ad