புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2016

டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா வெற்றி உலக சுற்றுக்கு முன்னேற்றம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய ஓசியானா குரூப்–1 இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியா–தென் கொரியா
மோதும் ஆட்டம் சண்டிகாரில் நடந்து வருகிறது. இதில் முதல் நாளில் நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராம்குமார், சகெத் மைனெனி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் இந்திய அணி 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் நேற்று நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்–ரோகன் போபண்ணா ஜோடி, தென் கொரியாவின் ஹாங் சுங்–சியோன் ஷான் ஹாங் இணையை எதிர்கொண்டது. இதில் லியாண்டர் பெயஸ்–ரோகன் போபண்ணா ஜோடி 6–3, 6–4, 6–4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை பெற இந்திய இணைக்கு 1 மணி 41 நிமிடம் தேவைப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி 3–0 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி உலக ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சகெத் மைனெனி (இந்தியா), சியோங் ஷான் ஹாங்கையும், ராம்குமார் (இந்தியா), யோங் கு லிம்மையும் (தென் கொரியா) சந்திக்கிறார்கள். இந்த ஆட்டத்தின் முடிவு போட்டியின் முடிவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
டேவிஸ் கோப்பை போட்டியில் 5–வது முறையாக இணைந்து விளையாடும் லியாண்டர் பெயஸ்–ரோகன் போபண்ணா ஜோடி பெற்ற 3–வது வெற்றி இதுவாகும். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இணைந்து விளையாட இருக்கும் இந்த இணைக்கு இந்த வெற்றி புதிய உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிக்கு பிறகு ரோகன் போபண்ணா கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் இடையே நல்ல புரிந்துணர்வு இருந்தது. இல்லாவிட்டால் இவ்வளவு எளிதில் வெற்றி பெற்று இருக்க முடியாது’ என்றார்.

ad

ad