புதன், ஜூலை 06, 2016

வோக்ஸ்வேகன் தொழிற்சாலைக்கான காணி விரைவில் - முதலீட்டுச் சபை

குருணாகல் - குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள வோக்ஸ்வேகன் கார்களை பொருத்தும்
தொழிற்சாலைக்கான அரச காணியை விரைவில் வழங்கவிருப்பதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் முதலீட்டுச் சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய, வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியான செனோக் ஒட்டோமொபையில் நிறுவனத்தின் தலைவர் நொயல் செல்வநாயகம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த நிறுவனம் ஆயிரம் மற்றும் இரண்டாயிரம் வலுகொண்ட டீசல் இயந்திரங்களுடன் கூடிய வாகனங்களை பொருத்த உள்ளது.
passenger cars, Sport Utility Vehicles (SUV), Multi Utility Vehicles (MUV) ஆகிய வாகனங்கள் இலங்கை தொழிற்சாலையில் பொருத்தப்பட உள்ளன.