புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2016

பிரிட்டன் விரைவாக வெளியேற வேண்டும்: ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தல்

ஐரோப்பிய யூனியன் – பிரிட்டன் இடையிலான பிரிவு சுமுகமானதாக இருக்காது என்றாலும், அது விரைவாக நிகழ விரும்புவதாக
ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜான்-கிளாட் ஜங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஜெர்மன் வானெலியில் கூறியதாவது:
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் என்று பொதுவாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பளித்த பின்னரும் அதன் செயலாக்கத்தை அக்டோபர் மாதம் வரை பிரிட்டன் தள்ளி வைத்துள்ளது ஏன் என்று புரியவில்லை.
இந்தப் பிரிவினை சுமுகமானதாக இருக்கப்போவதில்லை.
இருந்தாலும், அது அதிக வலியை ஏற்படுத்தாமல் மிகத் துரிதமாக நிகழ்ந்துவிட வேண்டும் என்பதே என் விருப்பம்.
“பிரெக்ஸிட்’டுக்கு ஆதரவாக பிரிட்டன் மக்கள் வாக்களித்த நாள் ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் மிக மோசமான நாள் என்றார் அவர்.
பிரிட்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரிட்டன் மக்கள் வாக்களித்தனர். இந்த முடிவு வெள்ளிக்கிழமை வெளியானதையடுத்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வரும் அக்டோபர் மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பொறுப்பேற்கவிருக்கும் புதிய பிரதமர், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார் எனவும் கேமரூன் கூறினார்.
பிரெக்ஸிட்: மீண்டும் பொது வாக்கெடுப்பு கோரி 10 லட்சம் பேர் கையெழுத்து மனு
லண்டன், ஜூன் 25: ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் உறுப்பினராக நீடிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரும் மனுவில் 10 லட்சத்தும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர்.
கையெழுத்துகளின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளதால், அந்த மனு குறித்து நாடாளுமன்றம் விவாதிப்பது கட்டாயமாகியுள்ளது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து அங்கம் வகிக்கலாமா, அல்லது வெளியேறலாமா என்பது குறித்து பொதுமக்களின் கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு அந்த நாட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.அதில், ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்கு ஆதரவாக 51.9 சதவீதத்தினரும், யூனியனில் தொடர்ந்து உறுப்பினராக நீடிக்க வேண்டும் என்று 48.1 சதவீத்தினரும் வாக்களித்தனர். இதையடுத்து, “வெளியேற வேண்டும்’ என்ற கருத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், பிரிட்டன் அரசு வலைதளத்தில் வில்லியம் ஆலிவர் ஹீலி என்பவர் பதிவு செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா, வெளியேறலாமா என்பதற்கான பொது வாக்கெடுப்பில் 75 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவாகியிருந்தால், 60 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்ற கருத்தே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட வேண்டும். அதற்கான சட்டத்திருத்தத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மனுவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 72.2 சதவீத வாக்காளர்களே வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு?: பிரிட்டனின் அங்கமாக ஸ்காட்லாந்து தொடரலாமா, அல்லது தனி நாடு அந்தஸ்து பெறலாமா என்பதற்கான பொது வாக்கெடுப்பு கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில், பிரிட்டனின் அங்கமாகத் தொடர்வதற்கு ஆதரவாக பெரும்பாலானோர் வாக்களித்தனர்.

தற்போது “பிரெக்ஸிட்’ பொது வாக்கெடுப்பையடுத்து, பிரிட்டனில் நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடும் என்று ஸ்காட்லாந்து பிரதமர் அறிவித்துள்ளார்பிரிட்டன் விரைவாக வெளியேற வேண்டும்: ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தல்

ad

ad