புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2016

சுவாதி கொலையாளி ராம்குமாரை பிடித்தது எப்படி? ஏன் கொலை செய்தான்? சென்னை காவல் ஆணையர் ராஜேந்திரன் பேட்டி


சுவாதியை கொன்ற ராம்குமாரை கைது செய்தது எப்படி என்று சென்னை காவல் ஆணையர் ராஜேந்திரன் இன்று செய்தியாளர்கள் முன் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர்,  ‘’சுவாதி கொலை தொடர்பாக கடந்த 24ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.  விசாரணைக்கு சுவாதியின் பெற்றோர் முழு ஒத்துழைப்பு தந்தனர்.  சுவாதி வேலை செய்த நிறுவனத்திலும் விசாரித்தோம்.  பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததில் ராம்குமாரை கைது செய்தோம்.    

குற்றவாளியை கைது செய்ததில் நெல்லை போலீசார் உதவி செய்தனர்.  போலீஸ் படை சுற்றி வளைத்தபோது ராம்குமார் வீட்டிற்குள் இல்லை.  வீட்டிற்கு பின்புறம் மறைந்திருந்தபோது போலீசார் பிடித்தனர்.

அப்போது கழுத்தை பிளேடால் வெட்டிக்கொண்டதால், தென்காசியில் ராம்குமாருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நெல்லையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


சுவாதியை பின் தொடர்ந்து பழக விரும்பியுள்ளார் ராம்குமார்.  அதனால் கொலை செய்திரு க்கிறார்.  மற்றபடி, சுவாதி கொலையில் ராம்குமாரை தவிர வேறு யாருக்கும் தொடர்பில்லை. விசாரணை பற்றிய முழு விபரங்களை தற்போது கூற இயலாது.   ராம்குமாருக்கு எதிரான ஆதாரங்களை விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்.  அடையாள அணிவகுப்பு நடந்த பின்னர்தான் கொலையாளி ராம்குமாரியின் புகைப்படங்களை காவல்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்’’ என்று தெரிவித்தார்.  

ad

ad