புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2016

மதுரையில் ​வைரமுத்து பிறந்த நாள் விழா - இலங்கை கவிஞர்களுக்கு பரிசு

  மதுரை தனியார் ஹோட்டலில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் பேசியதாவது , ஆண்டுதோறும் ஜூலை 13 ஆம் தேதி தனது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருவதாகவும் , இந்தாண்டு 63 வது பிறந்தநாள் மதுரை ராஜா முத்தையா மண்டபத்தில் கொண்டாடப்படவுள்ளதாக தெரிவித்தார் . இதனை கவிஞர்களின் திருநாள் என வெற்றி தமிழர் பேரவை கொண்டாடுகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் ஒரு கவிஞரை தேர்ந்தெடுத்து பரிசளித்து வருவதாகவும் . அதனை தொடர்ந்து இந்தாண்டு ஈழத்து கவிஞர்கள் ஜமீல் , நெளபல் ஆகிய இருவருக்கு விருதும் , தலா 50 ஆயிரம் வீதம் நன்கொடையும் வழங்கப்படவுள்ளதாக கூறினார் . 

அறக்கட்டளை உருவாக்கி ஏழை மாணவர்கள் தாய்மொழி பயின்று உயர்கல்விக்கு உதவி செய்யும் வகையில் தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்த 6 பேருக்கும் ஜீலை 13 ஆம் தேதி உதவி செய்யப்படுகின்றது. கல்வி , தொழில்நுட்பம் இரண்டும் காக்கும் பொறுப்பு புதிய தலைமுறையினருக்கு உள்ளது . முன்னர் 28 % தமிழ்நாட்டில் கல்வி அறிவை பெற்றிருந்த போது அமைதியாக இருந்தது தற்போது 80 % கல்வி அறிவை பெற்றும் பாதுகாப்பற்றுள்ளது ஏன் என கேள்வி.

கலையும் பண்பாடும் சந்தை படுத்தியே வந்தது. சந்தையில் சரியான சரக்கு இருத்தல் வேண்டும் , திரைப்பட பாடல்களில் கொச்சைபடுத்துகிறது என கூறமாட்டேன்.  திரைப்பட பாடல்கள் இல்லாத போது சமூகம் நேர்மையாக இருந்ததற்கான ஆதாரம் என்ன?  திரைப்பட பாடல்கள் கொச்சைப்படுத்துவதை ஊக்கபடுத்தி விடுமோ என வருத்தமளிக்கின்றது. பாடல் எழுதும் தமிழ் கவிஞர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. இதற்கு காரணம் சமூகம் தான்.   பாடல் வரிகள் எழுதும் கவிஞர்களின் குற்றமல்ல.   பல்வேறு பரிசுகள் , பட்டங்கள் பெற்றிருந்தாலும் என் வாழ்நாள் சாதனை என்னவென்றால் 14 வயதில் எனக்கு கவிதை வந்தது தான்  என்று கூறினார் வைரமுத்து.

ad

ad